கமலும், கவுதமியும் இத்தனை வருடம் இணைந்து வாழ்ந்தது எதற்காக தெரியுமா? #Gautami
சென்னை: கமல், கவுதமி இணைந்து வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று முன்பு ஒருமுறை தனித்தனி நிகழ்வுகளில் அவர்கள் மவுனம் கலைத்தனர்.
2005ம் ஆண்டு முதல் கவுதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார் கமல். இந்நிலலையில் மலையாள பத்திரிகையொன்றுக்கு 2013ல் அளித்த பேட்டியில் முதல்முறையாக அதுகுறித்து மவுனம் கலைத்தார் கமல்.
கமல் கூறியதாவது: தேவைப்படும்போது நட்பை பயன்படுத்திக்கொண்டு பிறகு வேண்டாம் என்று சொல்வது தவறு. அது நல்ல நட்புக்கு அழகில்லை. கவுதமி என் கூடத்தான் இருக்கிறார்.

தப்பு இல்லை
கவுதமியின் கவலைகளை நான் புரிந்து வைத்திருக்கிறேன். அவருக்கு பாசத்தையும், சந்தோஷத்தையும் நான் தருகிறேன். வேதனையிலும் பங்கெடுக்கும்போதுதான் பந்தம் பலப்படும். மனதுக்கு பிடித்த ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது?

விமர்சன கவலையில்லை
விமர்சனம் செய்கிறவர்களுக்கு அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். மன ஒற்றுமையோடு சேர்ந்து வாழ்கிறவர்களுக்கு அது சரி என்றால் மற்றவர்கள் அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்றார் கமல். கவலைகளை பங்கிட்டு குறைப்பதே இந்த நட்பின் நோக்கம் என்பது கமல் வாதம்.

கவுதமியும் உருக்கம்
கிட்டத்தட்ட அதையே எதிரொலித்து ஒரு முறை கவுதமியும் வாய் திறந்திருந்தார். அவர் கூறுகையில், கமல் என் வாழ்க்கையின் தூண் என்பதை விட அதை விடவும் மேலானவர் விஸ்வரூபம் படத்தின் போது என்னை அழைத்து இப்படத்தின் காஸ்டியூமராக நீ இருக்கிறாயா என்றார். உடனடியாக சரி என்று சொன்னேன். மீண்டும் அவர் எனக்கு வாழ்வளித்தவர் என்று கூறினார் கவுதமி. புற்றுநோயிலிருந்து கவுதமி மீண்டுவர கமலின் ஆதரவு இருந்ததாக கவுதமி கூறி பெருமைப்பட்டுள்ளார்.

காரணம் என்ன
இப்படிப்பட்ட ஆதர்ஷ நட்புதான் இப்போது முறிந்துள்ளது. ஆனால், யார் மீதும் குறை சொல்லாமல் மிகுந்த நாகரீகத்துடன் நட்புக்கு விடை கொடுத்துள்ளார் கவுதமி. இந்த முறிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து போகபோகத்தான் தெரியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications