மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்குறீங்களா.. மயிலாடுதுறை சத்யா கதை தெரியுமா? இரவோடு இரவாக எல்லாமே!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் வங்கி மற்றும் நுண்கடன் நிறுவனங்களில் சுற்றுவட்டார பெண்களின் பெயரில் கடன்களை பெற்றுவிட்டு தலைமறைவானதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சுமார் 30 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் வங்கி மற்றும் நுண்கடன் நிறுவனங்களில் சுற்றுவட்டார பெண்களின் பெயரில் கடன்களை வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை கட்டாமல் விட்டதால் இப்போது பல பெண்கள் சிக்கலில் சிக்கி உள்ளனர்.

கடனை கட்டாத சத்யா என்ற பெண், இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டாராம். செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த பெண், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், சத்யா என்பவர் குழு தலைவி, நாங்கள் எல்லாரும் ஒன்றரை லட்சம், ஒரு லட்சம் என்று வாங்கி கொடுத்துள்ளோம்.. பாதி பணத்தை கட்டியுள்ளார். மீதி பணத்தை கட்டவில்லை.. கடந்த 3 மாதங்களாக பிரச்சனையாக உள்ளது சார்.. தருகிறோம், தருகிறோம் என்று கூறி தரவில்லை.. இரவோடு இரவாக வீட்டை காலி செய்து போய்விட்டார்.
எங்களால் கடனை கட்ட முடியாது.. கடந்த 3 மாதங்களாக போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து செல்கிறேன்.. தனி புகார் என்பதால் புகாரை எடுக்க மறுத்து விட்டனர். இப்போது 30 பேர் சேர்ந்துள்ளோம்.. எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டும். பணம் கொடுத்தும் நான்கு அல்லது ஐந்து மாதங்களாக பணம் கட்டாமல் குழு தலைவி சத்யா ஏமாற்றி உள்ளார்." இவ்வாறு அந்த பெண் கூறினார்.
இதனிடையே மாயவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், சத்யா என்பவர் குழு தலைவியாக இருந்து என்னிடம் ஒன்றரை லட்சம் வாங்கினார்கள்.. 75000 கட்டுனாங்க.. 75000 கட்டவே இல்லை.. குழுக்காரங்க வந்து அசிங்க அசிங்கமாக கேட்குறாங்க.. 60 பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளோம். ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளோம்.. எங்கயாச்சும் போயிட்டு வந்துனாலும் கட்டுங்க என்று அசிங்கமாக கேட்குறாங்க.. எங்களால் முடியாத சூழ்நிலையில் வேறுவழியில்லாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றார். இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications