ஜெயலலிதாவுக்கு அவசர சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து டாக்டர் ரிச்சர்ட் குழு வருகை?
லண்டனிலிருந்து சிறப்பு நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ரிச்சர்ட் பியால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியால் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலும், சிறப்பாக சிகிச்சையளிப்பதில் நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பியல். எனவே இவரது உதவியை நாடினர் அப்பல்லோ மருத்துவர்கள். அதன்படி அவரும் அவ்வப்போது சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து திரும்பினார்.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ரிச்சர்ட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர் அப்பல்லோ மருத்துவர்கள். அவரது ஆலோசனைப்படியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அப்பல்லோ மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், டாக்டர் ரிச்சர்ட் பியால் தலைமையிலான குழு அப்பல்லோவுக்கு நேரடியாக வந்து சிகிச்சையளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றோ, நாளையோ அந்த குழு அப்பல்லோ வரலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications