ஜெயலலிதாவை குணப்படுத்த டாக்டர்கள் முடிந்த அளவு முயற்சி: அப்பல்லோ நிர்வாகி
டாக்டர்கள் முழு வீச்சில் செயல்பட்டு முடிந்த அளவு ஜெயலலிதாவை குணப்படுத்த முயல்வதாக அந்த மருத்துவமனை செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவை குணப்படுத்த அப்பல்லோ மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்துவருவதாக அந்த மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த டிவிட்டில் அவர் மேலும் கூறுகையில், மாண்புமிகு முதல்வரின் நிலைமையை டாக்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர்கள் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
Our doctors are closely monitoring Hon'ble CM's condition and they are trying their very best. #GodblessAmma @HospitalsApollo
— Sangita Reddy (@SangitaApollo) December 4, 2016
முன்னதாக வெளியிட்ட ஒரு டிவிட்டில், ஜெயலலிதா ஆபத்தான கட்டத்திலுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின், சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் எக்மோ உட்பட அனைத்து வகை சிகிச்சைகளையும் கொடுக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications