பிரசவ ஆபரேஷனில் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்- குமுறும் திருச்சி தம்பதி!
திருச்சி: திருச்சியில் பிரசவ அறுவை சிகிச்சை செய்தபோது கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பெண்ணின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி குண்டூர் அய்யனார்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் இந்திய ராணுவத்தில் அசாமில் உள்ள பட்டாலியனில் பீரங்கி படையில் பணியாற்றுகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் திருச்சி கலெக்டர் பழனிச்சாமியை சந்தித்து புகார் அளித்தார்.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், ''எங்களுக்கு ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில், எனது மனைவி ராஜலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி திருச்சி குழந்தை யேசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜலெட்சுமி, சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிறகு கடுமையான வயிற்று வலியால் துடித்தாள். அடுத்து அவளுக்கு வாந்தி, வயிற்று போக்கு என அடுத்தடுத்து தொந்தரவுகள் ஏற்பட்டது. இதனால் மீண்டும் குழந்தை பிறந்த குழந்தை யேசு மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன். அவளை பரிசோதித்த டாக்டர்கள், இது சாதாரண வயிற்று வலி என்றார்கள்.
ராஜலட்சுமியை பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போய் ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான். அவள் வயிற்றில் துணி இருப்பதும், பிரசவ ஆபரேஷனின்போது டாக்டர்கள், பேண்ட் எய்டு துணியை உள்ளே வைத்து தைத்து விட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அதை மீண்டும் ஆபரேஷன் செய்து, அந்த துணியை எடுத்தார்கள்'' என்றார்.
அப்பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 129 செ.மீ நீளமும், 11 செ.மீ அகலத்தில் இருந்த துணியை எடுத்துள்ளார்கள். இதை ஆபரேஷன் செய்து எடுக்காமல் இருந்திருந்தால் அவர் இறந்து போயிருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்த புகாரின் பேரில் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர் தம்பதியினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications