சிதறுதா திமுக ஓட்டு.. பாஜகவின் B டீமா?.. கமலுக்கு உடனே போனை போட்ட ராகுல்.. டக்கென கவனித்த மேலிடம்..!
சென்னை: ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.. கர்நாடகாவில் மே மாதம் முதல் வாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.
நேற்று கோவையில் மநீம தலைவர் கமல் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகள் பலர் கருந்துரையாற்ற நிறைவாக கமல்ஹாசன் பேசினார்.
ராகுல்காந்தி: கமல்ஹாசன் அப்போது பேசும்போது, ராகுல் காந்தி தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.

ஈவிகேஎஸ் சபாஷ்: ஏற்கெனவே ராகுல் காந்தியுடன் நெருக்கம் பாராட்டும் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.. இப்போது, கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ராகுலை காந்தி விரும்புவாகவும், இதற்கு கமலும் உடனே ஓகே சொன்னதாகவும் தெரிகிறது.. இதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன
குட்டி குட்டி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2019 எம்பி தேர்தலை சந்தித்து, 3.78 சதவீத வாக்குகளை பெற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார் கமல்... தமிழகத்தில் இப்படி கலக்கிய அதேசமயத்தில்தான், அந்தமானில் மநீமய்யத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
துடுப்பு ஆதரவு: பிறகு, 2021 தேர்தலில் சரத்குமாருடன் கூட்டணி வைத்து, போட்டியிட்டது. ஆனால், மய்யம் சரிவை நோக்கி போய்விட்டது... வாக்கு சதவீதமும் 2.62% ஆக குறைந்துவிட்டது.. கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், வேறு வேறு கட்சிகளுக்கு பறந்துபோய்விட்டனர்.. அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள், நிர்வாகிகளின் கட்சி தாவல்கள் போன்றவற்றால் கமல் சோர்ந்து போயிருந்த நிலையில்தான் விக்ரம் படம் புது தெம்பை தந்தது.. சினிமாவிலும் சரி, அரசியலும் சரி, ஒரு துடுப்புபோல இந்த படம் வந்து சேர்ந்தது.. உதயநிதியின் தொடர்பால், திமுக கூட்டணி என்ற சலசலப்பும் வட்டமடிக்க ஆரம்பித்தது.
சறுக்கல்கள்: கடந்த தேர்தல்களில் பெற்ற சறுக்கல்களை இந்த முறை பெறக்கூடாது என்பதில் கமல் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. இதற்காக முதல்கட்டமாக தன்னுடைய கட்சியை பலப்படுத்த முனைந்து வருகிறார்.. மற்றொருபக்கம் வலுவான கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால்தான், எதிர்கால அரசியலுக்கு நல்லது என்றும் முடிவெடுத்துள்ளார்.. ஆனாலும், கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே பாஜகவின் "பி டீம்" என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.. கட்சி ஆரம்பித்ததும், இந்த விமர்சனம் அதிகமாகி கொண்டேதான் வருகிறது..
பாஜகவின் நிழல்: பாஜகவின் சாயல் என்ற நிழலை இப்போதுவரை கமலால் முழுமையாக ஒதுக்கி தள்ளவே முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல்.. அதனாலேயே ராகுலுடன் 'கை' கோரும் சூழலுக்கு ஆளாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. அன்று ராகுலின் பயணத்தில் பங்கேற்றபிறகும்கூட, பாஜக பி டீம் என்ற விமர்சனம் இன்னும் அழுத்தமாக ஒலிக்க ஆரம்பித்தது..

ஆனால், ஒவ்வொரு முறையும், பாஜகவின் நிழல் தான் இல்லை என்பதையே கமல் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் இருக்கும் அணி பலமான அணியாகவும், பாஜகவுக்கு மாற்றாகவும் இருக்கும் என்று கமல் நம்புகிறாராம்.. அதனாலேயே காங்கிரசுடன் கைகோர்க்க கமல் விரும்புவதாக சொல்கிறார்கள்.. கொள்கை ரீதியாக பாஜகவுடன் கூட்டு வைக்க முடியாது என்பதால்தான் காங்கிரசுடன் கை கோர்க்க கமல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கதர் தலைவர்கள் குஷி: அதேபோல, கமலின் வருகை, காங்கிரசுக்கு பலம் தரும் என்று கதர் தலைவர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.. முக்கியமாக ராகுல் காந்தி கமல் மீது தனிப்பட்ட பிரியத்தையும், நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்.. தேசம் முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், காங்கிரசுக்கு கமல் போன்ற ஒரு முகம் தேவைப்படுகிறது.. அது ராகுலுக்கு வலு சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, கமலை பொறுத்தவரை, கேரள பினராயி முதல் டெல்லி கெஜ்ரிவால் வரை அனைவருடனும் இணக்கமான நட்பை கொண்டிருக்கும்நிலையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க, கமல் முயலலாம் என்றும் சொல்கிறார்கள்..
இந்த முயற்சியைதான், அன்று சந்திரபாபு நாயுடு முன்னெடுத்தார்.. பிறகு மம்தா முன்னெடுத்தார். இப்போது முதல்வர் ஸ்டாலினும் முன்னெடுத்து வருகிறார்.. அந்த ரூட்டைதான் கமலும் எடுக்கிறார்.. நாடு முழுவதும் அறியப்பட்ட பிரபலம் என்பதால், அந்தந்த மாநில மொழிகளில் பிரச்சாரமும் செய்து, வாக்குகளையும், ரசிகர்களையும் தன்பக்கம் கவரும் திறமை கூடுதலாக உள்ளது. கர்நாடக தேர்தலையும் தாண்டி, தேசிய அளவில், கமலுக்கு இது உதவும் என்றாலும், காங்கிரசுக்கும் இது உதவக்கூடும் என்றே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்..

பி டீம்: அந்தவகையில் திமுகவுடன் கமல் கூட்டணி வைக்கும் பட்சத்தில், மிகப்பெரிய அதிர்ச்சியை பாஜகவுக்கு ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள்.. அதற்கேற்றவாறு, ராகுலின் சமீபகால அரசியலும், மக்களின் மனதை அபரிமிதமாகவே கவர்ந்து வருகிறது.. நேற்றைய தினம் மநீம நிர்வாகிகளுடன் மிகுந்த உற்சாகத்துடனும், பெருத்த நம்பிக்கையுடனும் கமல் பேசியிருப்பதும் பலரை கவனிக்க செய்துள்ளது. கூட்டணி பற்றி எந்த விஷயத்தையும் செய்தியாளர்களிடம் கமல் சொல்லவில்லையென்றாலும், களப்பணி, பூத் கமிட்டி விவகாரங்களை நிர்வாகிகளிடம் துரிதப்படுத்தியிருப்பதே மிகப்பெரிய பூஸ்ட்டை தந்துள்ளதாம்.
எம்.பி. சீட்?: ஒருவேளை, ராகுல் காந்தி + கமல் ஹாசன் + திமுக + கம்யூனிஸ்ட்கள், விசிக, மதிமுக, என்ற கூட்டணி உருவாகும்பட்சத்தில், அது பாஜகவுக்கு மிகப்பெரிய சிக்கலை தமிழகத்தில் உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.. கமலுக்கு ஒரு எம்பி சீட்டை ஒதுக்கி, தங்களுக்குள்ளேயே அவரை காங்கிரஸ் இணைத்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. இதெல்லாம் நடக்கும்பட்சத்தில், "பாஜகவின் பி டீம்" என்ற பிம்பம், கமலிடம் இருந்து தானாகவே கழண்டு விழுந்துவிடும் என்றும் நம்புகிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications