நாமக்கல்: அங்கீகாரம் பெறாத 13 பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
நாமக்கல்: உரிய அங்கீகாரம் இல்லாமல் நாமக்கல்லில் இயங்கி வரும் 13 தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையின்மை சான்று பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்தும் இதுவரை பள்ளிக் கல்வித்துறையின் தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று பெறாமலேயே சில பள்ளிகள் இயங்கி வருகிறது.

தடையின்மை மற்றும் அங்கீகாரச் சான்று பெறாத பள்ளிகள் விவரம்:
1.ஓலப்பாளையம் - மில்லினியம் எக்ஸல் அகாடமி பள்ளி
2.அணியாபுரம் - பார்க் வியூ அகாடமி பள்ளி
3.புதுச்சத்திரம் - ஆர்ஜிஆர் இண்டர்நேஷனல் பள்ளி,
4.ரெட்டிப்புதூர் - ஸ்ரீகுருகுலம் பள்ளி
5.ஏ.கே.சமுத்திரம் - ஞானோதயா பள்ளி
6.திருச்செங்கோடு - விரிக்ஷா குளோபல் பள்ளி
7.திருச்செங்கோடு - வித்யுத் பப்ளிக் பள்ளி
8.கோனூர் - குளோபல் டிஸ்கவரி அகாடமி
9.எஸ்.பி. புதூர் - துரோணாஸ் பப்ளிக் பள்ளி
10.கூலிப்பட்டி - மகாபாரதி பள்ளி
11.எருமப்பட்டி - நாளந்தாஸ் இண்டர்நேஷனல் அகாடமி,
12.ராசிபுரம் - எஸ்ஆர்வி இண்டர்நேஷனல் பள்ளி
13.முத்துகாளிப்பட்டி - எஸ்ஆர்பி இண்டர்நேஷனல் பள்ளி
ஆகிய 13 சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறையின் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரச் சான்று பெற்ற பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications