பாஜக அணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் - பாமகவை தொடர்ந்து மதிமுகவும் போர்க்கொடி!!
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்கெனவே பாமக கடும் அதிருப்தியில் இருக்கிறது. தற்போது மதிமுகவும் அதிருப்தியை வெளியிட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக அணி பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பாஜக அணியில் மதிமுக முதலிலேயே இணைந்துவிட்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் பஞ்சாயத்து எதுவும் செய்யாமல் அமைதி காத்து வந்தது மதிமுக.

14-ல் தேமுதிக உறுதி
அதே நேரத்தில் திடீரென கூட்டணிக்கு வருகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த தேமுதிகவோ கேட்ட 14 தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதே பாணியில் தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்த பாமகவும் திடீரென முரண்டு பிடித்து வருகிறது.

14 கேட்கும் பாமக
தாங்கள் வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளுடன் மேலும் 4 தொகுதிகள் வேண்டும்.. தேமுதிகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. இதனால் பாஜக அணியில் பாமக நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

10 தொகுதிக்கு போராடும் மதிமுக
தற்போது பாமகவைப் போல மதிமுகவும் 10 தொகுதிகளுக்கு குறைவான எந்த ஒரு உடன்பாட்டையும் ஏற்க முடியாது என்று கூறுகிறது. பாஜக அணியில் 12 தொகுதிகளைக் கேட்டது மதிமுக.

கவுரமாக நடத்துங்க..
தேமுதிக, பாமக ஆகியவை விரும்பும் தொகுதிகளை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதம் காட்டுகின்றன. அதனால் மதிமுகவும் மற்ற கட்சிகளைப் போல எங்களையும் கவுரமாக நடத்தியாக வேண்டும்.. தேமுதிக, பாமக போல நாங்களும் வலிமையான கட்சிதான்.. என்று கருத்துகளை தெரிவித்து வருகிறது.

என்னது 5 தொகுதிதானா?
தேமுதிகவின் யோசனைப்படி மதிமுகவுக்கு 5 தொகுதிகள்தான் ஒதுக்க வேண்டுமாம். இதைக் கேள்விப்பட்ட மதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம். அப்படியெல்லாம் 5 தொகுதிகளை வாங்கிக் கொண்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்கின்றனர் மதிமுக நிர்வாகிகள்.

8க்கும் குறைவு ஏற்பு இல்லை..
தாங்கள் கேட்ட 12 தொகுதிகளில் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது. அப்படி ஒதுக்கீடு செய்யவில்லை எனில் எந்த ஒரு முடிவையும் எடுப்போம் என்கிற வகையில் மதிமுக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

விலகுமா மதிமுக?
பாமக கூட்டணியில் இருந்து கழன்று கொள்ளுமோ என்கிற நிலையில் மதிமுகவும் எச்சரிக்கை விடுத்து வருவதால் பாஜக கதிகலங்கிக் கிடக்கிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications