"வெள்ளையா" இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொன்னது தப்பாப் போச்சே!
அமெரிக்க அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: வர வர அமெரிக்கர்களும் கூட நம்மவர்கள் மாதிரி ஆகி விட்டார்கள். கருத்துக் கணிப்பில் சொன்னது ஒன்றாகவும், முடிவு வேறாகவும் மாறி விட்டது அமெரிக்க அதிபர் தேர்தலில்.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஹிலரி கிளிண்டன்தான் அதிபர் தேர்தலில் வெல்வார் என்று கூறப்பட்டுவந்தது. சில வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் கூட ஹிலரிக்கு சாதகமாகவே இருந்தது.

தேர்தலுக்கு முந்தைய விவாதங்களிலும் கூட ஹிலரியே வென்றிருந்தார். டிரம்ப்பே வாய் விட்டுப் புலம்பும் அளவுக்கு ஹிலரி ஆதரவு அலையே காணப்பட்டது. ஆனால் முடிவு தலை கீழாகப் போய் விட்டது. சில முக்கிய மாகாணங்களை டிரம்ப் வென்றதால் முடிவு அவருக்கு சாதகமாக மாறி விட்டது.
உலக அளவிலான எதிர்பார்ப்பும் கூட ஹிலரி பக்கமே சாய்ந்து காணப்பட்டது. ஹிலரியே வெல்வார் என்று பல நாடுகளும் நம்பவும் ஆரம்பித்தன. ஆனால் அத்தனையையும் மீறி டிரம்ப் வென்று விட்டார்.
நம்ம ஊரில்தான் கருத்துக் கணிப்புகள், எக்ஸிட் போல்களை மீறி தேர்தல் தீர்ப்பை மக்கள் அளிப்பார்கள். தற்போது அமெரிக்க தேர்தலிலும் கூட அதே போல நடந்திருப்பது வியப்புக்குரியதாகியுள்ளது.
கடைசியில், "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா"ன்னு வடிவேலு படத்தில் வந்த வசனம் "ராங்"காப் போயிருச்சே பாஸ்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications