ஐஐடி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது: தமிழிசை வேண்டுகோள்
சென்னை: சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி விவகாரத்தை சில கட்சிகள் அரசியலாக்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஐ.டி. பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்த கருத்துகளை வெளியிட்டதால்தான் ஒரு குறிப்பிட்ட மாணவ அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டி அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையின் உண்மையின் நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை வைத்து, டெல்லியில் ராகுல்காந்தியோ, தமிழகத்தில் இளங்கோவனோ அரசியலாக்கி அதில் குளிர்காய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இங்கேயுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும், இதை வேண்டுமென்றே அரசியலாக்கி, கல்விப் பாதையில் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அரசியல் தூண்டுதல்கள் நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதையும் மாணவர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications