அடுத்தடுத்து 2 பெண்களை சரமாரியாக வெட்டிக் கொன்ற 'புலிக்குட்டி'க்கு போலீஸ் வலை வீச்சு
திருநெல்வேலி: தவறான நடத்தை காரணமாக மனைவி மற்றும் பக்கத்துவீட்டு பெண் ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொன்ற புலிக்குட்டி என்ற கூலித் தொழிலாளியை நெல்லை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரநல்லூர் ராஜிவ் காலனியை சேர்ந்தவர் புலிக்குட்டி. கூலித் தொழிலாளியான இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உளளனர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த குமார், நாகர்கோவிலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால் வாரம் ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார். இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் குமாரின் மனைவி பரமேஸ்வரியின் அக்கா மகன் வேல்முருகனுக்கும், புலிக்குட்டியின் மனைவி அருணாவுக்கும் இடையே கள்ள காதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் வேல்முருகனும், அருணாவும் கோவைக்கு எஸ்கேப் ஆகிவிட்டனர்.
இதனிடையே பரமேஸ்வரி கோவைக்கு சென்று அவர்கள் இருவரையும் வீரவநல்லூருக்கு காரில் அழைத்து வந்தார். இதில் கடுமையான ஆத்திரத்தில் இருந்து வந்தார் புலிக்குட்டி.
இது குறித்து மனைவி அருணாவுடன் புலிக்குட்டி நேற்று சண்டை போட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த புலிக்குட்டி, அருணாவை சரமாரியாக அரிவாளால் வெட்டித் தள்ளியுள்ளார். அதே அரிவாளுடன் அருணாவின் கள்ளக் காதலுக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரியை தேடிப் போய் வெட்டியிருக்கிறார் புலிக் குட்டி.
இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். இருவரையும் வெட்டிய கையோடு புலிக் குட்டி தலைமறைவாகிவிட போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications