1 லட்சத்து 66 ஆயிரம் பேர் உயிரைக் காவு வாங்கிய வெயில்! மண்டை பத்திரம் மக்களே! ஹீட் ஸ்ட்ரோக் வந்தால்?
புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தக் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.
தமிழ்நாட்டுப் பொதுச்சுகாதார நிறுவனம் மார்ச் 7 ஆம் தேதி ஒரு எச்சரிக்கை அறிக்கையைக் கொடுத்துள்ளது.

தமிழ்நாடு திட்டக்குழுவும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒரு விரிவான அறிக்கையை அளித்துள்ளது.
பல வழிகளில் மக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கப் போராடி வருகின்றனர். குளிர்ச்சியான பழங்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். அடுத்துக் குளிர்ந்த மர நிழலின் மூலம் கோடையை எதிர்த்துப் போரிடலாம்.
வெயில்தானே? நாம் பார்க்காததா? என்று அலட்சியம் மட்டும் கூடவே கூடாது என்கிறார் பொதுச் சுகாதார வல்லுநர் டாக்டர் அமலோற்பவநாதன்.
அவர் வெயிலின் கொடுமை பற்றிக் கொடுத்திருக்கும் பல தரவுகள் பகீர் ரகமாக உள்ளன.

கோடைக் காலத்தில் எந்தளவு உஷாராக இருக்க வேண்டும் என விளக்குகிறார் டாக்டர் அமலோற்பவநாதன். "இந்தக் கோடை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நாம் பழைய டேட்டாக்களை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே அது தொடர்பான சில தரவுகளை முதலில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
உதாரணமாகப் பார்த்தால் 1998இல் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இறந்து இருக்கிறார்கள் என்று அரசாங்க அறிக்கை சொல்கிறது.
அதாவது வெயிலின் தாக்கத்தில் 1 டிகிரி வெப்பநிலை அதிகமானால் இறப்பு சதவீதமானது 2 முதல் 3% அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு டிகிரி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது இறப்பு சதவீதமும் அதற்கு ஏற்ப உயர்ந்து கொண்டே போகும் என்பதுதான் அறிவியல் கண்டுபிடிப்பு.
ஆகவே அதிக கவனம் எடுத்துக் கொள்வது மிகமிக அவசியம்.
இந்தக் கவனம் என்பது மூன்று வகைப்படும். ஒன்று, தனிநபர் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனம். குடும்பங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனம் என்று சில உள்ளன. அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனம் என்று சில இருக்கின்றன.

தனிநபர் கவனம் தேவை:
உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். கூடிய வரை வெயிலில் நடமாடுவது தவிர்க்க வேண்டும். வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெயில் என்பது அனைவரையும் ஒரே மாதிரி பாதிக்காது. நபருக்குத் தக்க பாதிப்பின் அளவு மாறுபடும்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், ஏற்கெனவே இணை நோய்களின் தாக்கத்தில் உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். இதைத்தாண்டி வெயில் தாக்கம் உள்ளது என உணரமுடியாத அளவு மனநோயின் தாக்கம் உள்ளவர்கள். ஆகவே இவர்கள் எல்லாம் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
கட்டாயம் வெளியே செல்ல நேர்ந்தால், தலையில் துணி அல்லது தொப்பி இல்லை என்றால் குடை வைத்து வெயிலை மறைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். காலில் கட்டாயம் செருப்பு அணிவதும் முக்கியம். குடிநீர் பாட்டில் கூடவே எடுத்துச் செல்லவேண்டும்.
இங்கே குடை என்றதும் பலரும் கருப்பு நிறக் குடையை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மழைக்காலத்திற்குக் கருப்பு குடை எடுத்துச் செல்லலாம். வெயில் காலத்தில் கட்டாயம் கருப்புக் குடை கூடாது. அது வெயிலின் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே வெள்ளைக் குடையை மட்டுமே வெயில் காலங்களில் பயன்படுத்த வேண்டும்.
இரவிலும் வெயில் தாக்கும் தெரியுமா?

பலரும் என்ன நினைக்கிறார்கள் பகலில் மட்டும் வெயில் தாக்கும் என நினைக்கிறார்கள். அது தவறு. இரவிலும் வெயில் தாக்கம் இருக்கும். இரவில் நாம் தூங்கும் போது வேர்த்து நீர் உடலிலிருந்து வெளியேறும். அதைப் பலரும் உணராமல் தூங்கிக் கொண்டிருப்போம். எனவே இரவில் கர்ப்பிணிப் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆகவே, இரவில் அதிகம் தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்க வேண்டும். இரவில் இடையில் தூக்கம் களைந்து எழுந்தால் தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கப் போகவும். தாகத்தின் போது குடிநீர் மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், மோர் குடிப்பது நல்லது. அதைவிட்டால் உப்புச் சர்க்கரை கரைசல் குடிக்கலாம். அதாவது குளூகோஸ் பாக்கெட் வாங்கி, அதை நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்வது? அறிகுறி என்ன?
இதன் முதல் அறிகுறி எப்போதும் ஒரு எரிச்சலுடன் இருப்பார்கள். அடுத்து கால், கை நரம்புகள் இழுப்பதை உணரலாம். கால் பகுதியில் உள்ள சதைப் பகுதிகள் கல் போல் இறுகிப்போய் இருக்கும். ஒரு குழப்ப நிலையை உணரலாம். தொட்டுப் பார்த்தால் உடல் வெப்பம் அதிகம் உள்ளதை உணர முடியும். அதிகம் வேர்வை வெளியேறும். அப்படி இல்லை என்றால் வேர்வையே வராது. இரண்டும் ஒரே நோய்க்கான அறிகுறிதான்.
இப்படி அறிகுறி இருந்தால் அவர்களை அடிக்கடி நீர் குடிக்க வைக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். ஈரத்துணியால் உடலைத் தடவி விட வேண்டும். உப்பு சர்க்கரை கரைசலை வாங்கி குடிக்க வைக்க வேண்டும்" என்கிறார் இந்த மருத்துவர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications