For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அதை" மட்டும் தூக்கிட்டா நீங்க செம ஸ்டைல் விஜய்.. அன்புமணி

Google Oneindia Tamil News

Recommended Video

    மாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ

    சென்னை: விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களை அதகளப்படுத்திக் கொண்டுள்ளனர். நாளை விஜய்யின் பிறந்தநாள். அதை சர்கார் படத் தலைப்பு வெளியீடு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டோடு இணைத்து கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய்யின் பர்ஸ்ட் லுக் சலசலப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை. வாயில் சிகரெட்டோடு படு ஸ்டைலாக காட்சி தருகிறார் விஜய். படு இளமையாக, ஸ்டைலாக காட்சி தரும் விஜய்யின் வாயில் சிகரெட் இருக்கிறது.

    Dr Anbumani comments on Sarkar First look

    இதுகுறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வருபவர்.

    இந்த நிலையில் சர்கார் பட பர்ஸ்ட் லுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், அந்த சிகரெட் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் ஸ்டைலாக நீங்கள் காட்சி தருவீர்கள் என்று கூறியுள்ளார். மேலும், புகைப்பழக்கம் கொல்லும், புகைப்பழக்கம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற வாசகத்தையும் அவர் ஹேஷ்டேகாக போட்டுள்ளார்.

    English summary
    PMK leader Dr Anbumani Ramadoss has said in a Tweet that, You’ll look more stylish without that cigarette. He was commenting on Vijay's first look of his 62nd movie Sarkar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X