முதல்வராக பதவியேற்றார் அன்புமணி: மது ஒழிந்தது... இலவச கல்வி வந்தது... என்னா ஒரு விளம்பரம்!
சென்னை: அதிமுகவை தாக்கி திமுகவும், திமுகவை தாக்கி அதிமுகவும் மாறி மாறி விளம்பரம் செய்து வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, முதல்வராக உறுதிமொழி எடுத்துக்கொள்வது போல விளம்பரம் செய்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. மண்டல மாநாடுகள், ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தல் என்று வாக்கு வங்கியைப் பலப்படுத்தியது.
பாமக தனது முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவித்து அவரது தலைமையில் களப் பணியாற்றி வருகிறது.

மாற்றம் முன்னேற்றம்
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று போஸ்டர் ஒட்டிய கையோடு, முதல்வர் வேட்பாளர் அன்புமணி, அடிக்கடி சென்று மக்களைச் சந்தித்து போராட்டங்களில் ஈடுபட்டார்.

பூரண மதுவிலக்கு
பாமக. முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்றும் போஸ்டர் ஒட்டியது பாட்டாளி மக்கள் கட்சி. இலவச கல்வி, சுகாதாராம் என்று அறிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது.

வேட்பாளர்கள் தயார்
விருப்பமனு வாங்கிய கையோடு, நேர்காணலை முடித்து இப்போது வேட்பாளர் பட்டியலையும் தயாராக வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். முதல்வர் வேட்பாளரான அன்புமணியை முதல்வராகவே உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தவும் தொடங்கி விட்டார் டாக்டர் ராமதாஸ்.
அன்புமணி ஆசிய நான்
பூரணமாக மதுவை ஒழிப்பேன் என்று தொடங்கி, ஊழலை ஒழிப்பேன், கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அளிப்பேன். ஒரு வீட்டிற்கு ஒருவருக்கு வேலை அளிப்பேன். அனைவரும் தன்மானத்தோடு, கண்ணியமாக வாழ வழி செய்வேன், வாருங்கள் இணைவோம், புதியதோர் தமிழகம் செய்வோம் என்று உறுதி மொழி எடுக்கிறார் அன்புமணி.
|
மக்களிடம் எடுபடுமா?
ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் மாறி மாறி தூற்றிக்கொண்டிருக்க, அன்புமணி முதல்வராகவே உறுதி மொழி எடுத்துக்கொள்வது போல விளம்பரம் செய்து வருகிறார். இது வாக்காளர்களிடம் எந்த அளவிற்கு எடுபடும் என்பது தேர்தலில் தெரியவரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications