கீழக்கரையில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி: மயில்சாமி அண்ணைாதுரை பங்கேற்பு
ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாளை முன்னிட்டு கீழக்கரையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதில் இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் மாணவ, மாணவிகளுக்கு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மேலும், கலாம் நினைவு அமைதி பேரணி நடந்தது. இதில் கலாம் படம் பொறிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து கொண்டு ஏராளமான, மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை தாங்கினார். இஸ்ரோ துணை இயக்குநர் டாக்டர் சர்மா, , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், அப்துல் கலாம் சர்வதேச பவுண்டேஷன் சேக் சலீம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி முதல்வர் சமயா உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications