துயர் துடைப்பு களத்தில் ஒரு முதல்வர் - ஓபிஎஸ்-க்கு டாக்டர் கிருஷ்ணசாமி பாராட்டு!
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் சாய்ந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பிகளை காலம்தாழ்த்தாமல் சீரமைக்க வேண்டும். புயலின் பாதிப்புகளிலிருந்து சென்னையை தொய்வு இல்லாமல் விரைந்து சீரமைக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:

இயற்கை சீற்றங்கள் விபத்துக்கள் பிற துயர நிகழ்வுகளின் பொழுது மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், அவர்களின் துயரங்களுக்கு தீர்வு காணவும், நேரடியாக அப்பகுதிக்கு செல்ல வேண்டியதும், நிவாரணப் பணிகளை முடிக்கிவிட வேண்டியதும் அரசு பொருப்பில் இருக்க கூடிய முதலமைச்சரின் கடமையாகும். கடந்த ஆண்டு பெரும் வெள்ளத்தால் சென்னை தத்தளித்த பொழுது தமிழக அமைச்சர்கள் உடனடியாக களத்துக்கும் வரவில்லை, நிவாரணப் பணிகளையும் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது.
ஆனால் நேற்று வீசிய வர்தா புயலால் வீழ்ந்து கிடக்கும் சென்னையை தட்டி எழுப்பிட அடிமட்ட அதிகாரிகளை காட்டிலும் எழுமையான முறையில் தமிழக முதலமைச்சராக அன்மையில் பொறுப்பேற்றிருக்கும் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்படுகிறார் என்ற செய்தி சென்னை வாழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இரவு 8 மணிக்கும் சென்னையில் இருந்து 60கிமீக்கு அப்பால் உள்ள பொன்னேரியில் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை ஓ பன்னீர் செல்வம் வழங்கினார் என்ற செய்தி மிகவும் பாராட்டதக்கது.
இது ஒரு நல்ல துவக்கம். சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் வீடுகளை இழந்தோர், பயிர் வகை பாதிப்புக்கு ஆளானோர், ஆடு மாடுகளை இழந்தோர், உயிரிழப்புக்கு ஆளான குடும்பங்கள் அனைவருக்கும் மத்திய அரசின் கையை எதிர்ப்பார்க்காமல் மாநில அரசே நஷ்டஈடு வழங்க வேண்டும். இன்னும் பல முகாம்களில் மக்களுக்கு உடனடி தேவையான உணவு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் தகவல் வருகின்றன. அவர்களுக்கு நல்ல குடிநீர், குழந்தைகளுக்கு பால், தங்கும் இடத்தில் படுக்கைகள்,போர்வைக்கள், தரமான உணவு உரிய நேரத்தில் தடையில்லாமல் அரசே நேரடியாக வழங்கிட வேண்டும். சாய்ந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பிகளை காலம்தாழ்த்தாமல் சீரமைக்க வேண்டும். புயலின் பாதிப்புகளிலிருந்து சென்னையை தொய்வு இல்லாமல் விரைந்து சீரமைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications