தென்காசி லோக்சபா தொகுதியில் 7ஆவது முறையாக தொடர் தோல்வி! புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு என்னாச்சு?
தென்காசி: தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி 7ஆவது முறையாக தோல்வி அடைந்துள்ளார்.
தென்காசி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார், அதிமுக வேட்பாளர் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 4,25,679 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகளும் ஜான் பாண்டியன் 2,08,825 வாக்குகளும், இசை மதிவாணன் 1,30,335 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி 7ஆவது முறையாக தோல்வியுள்ளார். பரமக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மும்மொழி கொள்கையையும் நீட் தேர்வையும் ஆதரித்திருந்தார். இவர் 1999ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 10 இடங்களில் போட்டியிட்டது இவருடைய கட்சி.
ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி வெல்லவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லிங்கத்தை எதிர்த்து கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒட்டபிடாரம், நிலக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் திமுகவுடன் இணைந்து புதிய தமிழகம் போட்டியிட்டது. அந்த தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்தியிடம் தோல்வி அடைந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் 493 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் சுந்தரராஜனிடம் தோல்வியுற்றார்.
2019 ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிட்டு தென்காசி தொகுதியில் தோல்வியுற்றார். அதன்பிறகு தற்போது 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 7ஆவது முறை அடைந்துள்ளார்.
2001, 2006, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தொகுதிகளில் தோல்வியுள்ளார். 1996, 2011 ஆம் ஆண்டு நடந்த ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியில் வென்றார்.
லோக்சபா தேர்தல்களில் ஒரு முறை கூட வென்றதே இல்லை. 1984 ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதி, 1996 ஆம் ஆண்டு நடந்த திருநெல்வேலி தொகுதி ஆகியவற்றில் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியே அடைந்தார். இதைத் தொடர்ந்து தற்போது 2024 ஆம் ஆண்டிலும் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 7ஆவது முறையாக தோல்வி அடைந்தார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications