அனிதா பணம் கட்டி படித்ததற்கு ஆதாரம் இருக்கா?...செய்தியாளர்கள் கேள்வியில் சிக்கி திணறிய கிருஷ்ணசாமி!
மாணவி அனிதா தனியார் பள்ளியில் பணம் கட்டிக் படித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதையடுத்து அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று கேள்விகளால் துளைத்தனர் பத்திரிக்கையாளர்கள்.
சென்னை : மாணவி அனிதா பணம் கட்டி தனியார் பள்ளியில் படித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதால் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று பத்திரிக்கையாளர்கள் அவரை கேள்விகளால் துளைத்துவிட்டனர்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை கோரி முதல்வர் பழனிசாமியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமைச் செயலகத்தில் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது பத்திரிக்கையாளர்களுக்கும் அவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

மாணவி அனிதா அரியலூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றரை லட்சம் கட்டி படித்துள்ளார் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டனர். அது தகவல் தான் நீங்கள் சொன்னால் நான் மாற்றிக் கொள்கிறேன் என்று தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கினார்.
இதே போன்று தனது பேட்டியின் போது அடிக்கடி இன்றைய செய்தி அனிதா மரணத்திற்கு விசாரணை வேண்டும் என்பது தான் வேறு விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதற்கு பத்திரிக்கையாளர்கள், தாங்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கக் கூடாது என்று வறுத்தெடுத்துவிட்டனர்.
மேலும் இறுதியாக டாக்டர் கிருஷ்ணசாமியிடம் உங்கள் மகள் எவ்வளவு மதிப்பெண் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளிக்காமலேயே கிருஷ்ணசாமி ஓட்டம் பிடித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications