பாலபாரதியை நான் சட்டசபையில் பார்த்ததே இல்லை... டாக்டர். கிருஷ்ணசாமி ஒரே போடு!

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை நான் சட்டசபையில் பார்த்ததே இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை : முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை நான் ஒருமுறை கூட சட்டசபையில் பார்த்ததே இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தமத மகளுக்கு சிஎம் கோட்டாவில் மருத்துவ சீட் கேட்டு பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, அனிதா மட்டும் நீட் தேர்வு எழுதி மருத்துவராகி இருக்க வேண்டும் என்று கூறுவது ஏனோ என்று டாக்டர் கிருஷ்ணசாமியை சிபிஐ முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி முகநூலில் பதிவிட்டிருந்தார்.

Dr Krishnasamy says that he dont know about Balabharathi

இந்த பதிவை அவர் நீக்கிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கும் மறுப்பு செய்தியை போட்டார் பாலபாரதி. எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பாலபாரதியை தான் சட்டமன்றத்தில் பார்த்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த பாலபாரதி, டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை டாக்டர் என்று நினைத்திருந்தேன், அவர் மறதி நோய் கொண்டவராக இருக்கிறார் என்று கூறியுள்ளார் பாலபாரதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+