ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏவாக மதுரை டாக்டர் நான்சி சிந்தியா நியமனம்
சென்னை: 15வது சட்டசபையின் நியமன உறுப்பினராக டாக்டர் நான்சி ஆன் சிந்தியாவை ஆளுநர் ரோசய்யா நியமித்துள்ளார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த நியமனத்தை ஆளுநர் அறிவித்துள்ளார்.
டாக்டர் நான்சி மதுரையில் வசித்து வருகிறார். அவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் ஆவார். 1955ம் ஆண்டு மே 4ம் தேதி அவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தார். ஆங்கிலோ இந்தியர் ஆவார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியில் வசித்து வரும் இவர் அகில இந்திய ஆங்கிலோ இந்தியர்கள் சங்கத்தின் மதுரை கிளைத் தலைவராக இருக்கிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
தமிழக சட்டசபையில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களுக்கான நியமன உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 15வது தமிழக சட்டசபையின் ஆயுள் காலம் வரை நான்சி உறுப்பினராக இருப்பார். சபைக் கூட்டங்களில் இவர் கலந்து கொள்ளலாம். அதேசமயம் இவருக்கு ஓட்டுரிமை கிடையாது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications