‘அம்மா’வைத் தவிர பட்ஜெட்டில் எதுவுமில்லை... சொல்வது டாக்டர் ராமதாஸ்
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ‘அம்மா'வைத்தவிர வேறு எதுவும் இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக பட்ஜெட் வளர்ச்சிக்கு உதவாத கடனில் மூழ்கடிக்கும் வெற்று வெற்று காகித அறிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
2015-16 தமிழக பட்ஜெட் குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிதிநிலை அறிக்கையைக் கூட ஜெயலலிதாவின் புகழ்பாடும் அறிக்கையாக மாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். ‘அம்மா' இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததாலோ என்னவோ, இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படவில்லை.

எந்த திட்டமும் இல்லை
தமிழகத்தை கடுமையாக பாதிக்கக்கூடிய விவசாயம், தொழில் உற்பத்தி, மின்வெட்டு, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
வெறும் கையால் முழம்
புதிய மின்திட்டங்களையும் அறிவிக்காமல், அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் மின்வெட்டைப் போக்கப் போவதாக ‘வெறும் கையால் முழம் போடும்' வேலையைத் தான் அரசு செய்திருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தாவை ஏற்படுத்தவும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.
இலவசங்களுக்கு முக்கியத்துவம்
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான 3 துறைகளுக்கும் மொத்தமாக ரூ.35,794 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதைவிட 70 % அதிகமாக இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கு ரூ. 59,185 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழக அரசு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறதா.... அல்லது இலவசங்களுக்கு முக்கியத்துவம் தருகிறதா? என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
கொசுவலைக்கு வரிச்சலுகை
மக்களுக்காக சில சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக கொசுவலை, எல்.இ.டி பல்பு உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரிச்சலுகைகளை அறிவித்திருக்கிறார். இது மொத்த பட்ஜெட் மதிப்பில் 0.40 விழுக்காட்டிற்கும் குறைவாகும்.
காகித அறிக்கை
மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சிக்கு உதவாத, தொழில் வளர்ச்சியை பெருக்காத, வேலைவாய்ப்பை உருவாக்காத, பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளக்கூடிய, தமிழக மக்களை கடனாளியாக்கும் வெற்று வரவு-செலவு காகித அறிக்கை ஆகும்'' எனக் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications