ட்விட்டரில் ராமதாஸை ஆயிரம் பேர் பின்தொடர்ந்தாலும் அவர் ஃபாலோ செய்வது ஒரேயொருவரை தான்!
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை ட்விட்டரில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்தாலும் அவர் ஒரேயொருவரை மட்டும் தான் பின் தொடர்கிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. தமிழக சட்டசபை தேர்தல் நேரத்திலும் கூட ட்விட்டரில் கருத்து தெரிவிக்க தவறாதவர்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தேர்தல் நேரத்தில் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அவரை போன்றே திமுக தலைவர் கருணாநிதியும் தேர்தல் ஆணையம் மீது புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் ட்விட்டரில் சேர்ந்த ராமதாஸை தற்போது வரை 20 ஆயிரத்து 455 பேர் பின்தொடர்கிறார்கள். ஆனால் அவர் ஒரேயொரு நபரை மட்டும் தான் ட்விட்டரில் பின்தொடர்கிறார்.
அந்த நபர் டாக்டர் சுதாமன். டாக்டர் சுதாமனை மொத்தமே 9 பேர் தான் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். அதில் ஒருவர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications