திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்
திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..
கடந்த ஓராண்டாக முதுமை மற்றும் உடல்நிலை குறைவால் தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கி இருந்தார். அண்மையில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியின் பவளவிழா கண்காட்சி அரங்கத்தை 40 நிமிடங்கள் கருணாநிதி பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் திருமணத்தை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி நடத்தி வைத்தார். இந்த நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்றார்.
அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ராமதாஸுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், கருணாநிதி தம்மை பார்த்து சிரித்தார். என்னிடம் பேசுவதற்கும் முயன்றார். முன்பை விட கருணாநிதியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. கருணாநிதி விரைவில் பேசுவார் என்றார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications