நின்றார்கள்... நடத்தினார்கள்... வென்றார்கள்: டுவிட்டரில் ராமதாஸ் கிண்டல்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!" என்று பாமக நிறுவனர் ராமதாஸ், என கூறியுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் வளர்மதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்தனை விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை அதிமுகவினர் கொண்டாடி வரும் வேளையில் எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடாமல் விலகிய கட்சியினரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவினை விமர்சித்து தனது கருத்தினை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

எத்தனை பேருக்கு சிறை
ஏற்கனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பற்றி தினசரி டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தார் டாக்டர் ராமதாஸ். தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றால் ஓராண்டு சிறை என்று தேர்தல் ஆணையம் எச்சரித்ததை கிண்டலடித்த டாக்டர் ராமதாஸ், அப்படியா? இதுவரை எத்தனை பேர் சிறைக்குப் போயிருக்காங்க? என்று கேட்டார்.

உலகம் நம்புதா?
இடைதேர்தலுக்கு முதல்நாள் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள டாக்டர் ராமதாஸ், திருவரங்கம் இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி: அப்படியா... இன்னுமா உங்களை இந்த உலகம் நம்புகிறது? என்று கேட்டுள்ளார்.
|
அவர்களே நடத்தினார்கள்
"திருவரங்கம் தேர்தல் முடிவு: யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!"என்றும் அவர் கூறியுள்ளார்.

கிண்டல்தான்
ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என ஆளுக்கு முதலாக விலகிய பாமகவின் ராமதாஸ், இப்போது கிண்டல் தொணியில் டுவிட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications