For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசு வாங்கும் முன்பே நெய்க்கு விலை பேசினானாம்... அந்த கதையாவுல்ல இருக்கு?

பசு வாங்குவதற்கு முன்பாகவே நெய்க்கு விலை பேசினானாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    கமலின் கட்சி அறிவிப்பு மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நால்வர்! | Oneindia Tamil

    சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கிண்டல் பதிவுகளை போட்டுள்ளார்.

    டாக்டர் ராமதாஸ் தினசரியும் பல பதிவுகளை போடுவது வழக்கம். அரசை கிண்டலிப்பார். எதிர்கட்சியான திமுகவை விமர்சிப்பார்.

    இன்றும் சில பதிவுகளைப் போட்டுள்ளார். சில பதிவுகள் யாருக்கானது என்று புரிந்தாலும், பசு வாங்குவதற்கு முன்பாகவே நெய்க்கு விலை பேசினானாம் என்று போட்டது யாருக்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பழமொழி

    "பசு வாங்குவதற்கு முன்பாகவே நெய்க்கு விலை பேசினானாம்" - கிராமத்து பழமொழி

    பட்ஜெட் உபரி நிதி

    சிங்கப்பூர் பட்ஜெட்டில் ரூ.50,000 கோடி உபரி நிதி. மக்களுக்கு ரூ.15,000 வரை போனஸ்: செய்தி - அங்கு நடப்பது தான் உண்மையான மக்களாட்சி. தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சி அமைந்தால் இது சாத்தியம் தான் என்று பதிவிட்டுள்ளார் ராமதாஸ்

    புதிய கொள்கை

    விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தொலைக்காட்சி. ஆனால், விலையுள்ள வாக்குகள். இது தான் திராவிட அரசியலின் புதிய கொள்கை... புதிய புரட்சி! என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

    யாரை கிண்டலடிக்கிறார்

    யாரை கிண்டலடிக்கிறார்

    நடிகர் கமல்ஹாசன் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது அரசியல் வருகைக்கு பலரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்று பதிவிட்டுள்ளார். ஆனால் டாக்டர் ராமதஸின் பதிவு யாருக்கானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Pattali Makkal Katchi founder Dr Ramadoss's one line comments and slams are rocking in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X