யோக்கியர்கள் வருகிறார்கள்... சொம்பைத் தூக்கி உள்ளே வையுங்கள்! மநகூ தலைவர்கள் குறித்து ராமதாஸ்
சென்னை: நாங்கள் கறை படியாத கரங்கள் என்றும், ஊழல் கட்சிகளை ஒழிக்கவே மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாளவன் ஆகியோர் மேடை தோறும் பேசி வருகின்றனர்.
மூன்றாம் கட்ட பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேற்று திருவள்ளூரில் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். அப்போது கூட்டத்திற்கு மின்சாரம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து டுவிட்டரில் கருத்து கூறியுள்ள டாக்டர் ராமதாஸ், யோக்கியர்கள் வருகிறார்கள்... சொம்பைத் தூக்கி உள்ளே வையுங்கள்! என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்களோ?
|
மின் திருட்டா?
திருவள்ளூரில் நேற்று மக்கள்நலக்கூட்டணி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பேதே மின்தடை ஏற்பட்டதால் வைகோ, தனது பேச்சை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. ஆனால் ராமதாஸ், கூட்டத்திற்கு திருட்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
|
ஒரே கத்தியில் மொட்டை
இதேபோல் முதல்வர் ஜெயலலிதா, நேற்று பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். இதற்கும் கிண்டலடித்துள்ள ராமதாஸ்,
ஒரே கத்தி... ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மொட்டை... ஆஹா என்ன சாதனை? என்று கேட்டுள்ளார்.
|
சாதனைக்கு விளம்பரம்
அதிமுக அரசின் சாதனைகளை பாராட்டி பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கின்றனர். இதனையும் கிண்டலடித்துள்ளார் ராமதாஸ்.
|
கட்டாத பாலங்கள்
கட்டி முடிக்கப்படாத சென்னை பாலத்துக்கு இன்று திறப்பு விழா: செய்யாத சாதனைகளுக்கே விழா நடத்திய ஜெயலலிதாவுக்கு இது பெரிய விஷயமா? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
|
இலவு காத்த கிளி
அதிமுகவை விமர்சித்துள்ள ராமதாஸ், விஜயகாந்தின் இழுபறி கூட்டணி பற்றியும் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.
|
அத்தைக்கு மீசை
தமிழகத்தில் அடுத்தது திமுக ஆட்சிதான் என்று கூறி வரும் ஸ்டாலினையும், விட்டு வைக்கவில்லை டாக்டர் ராமதாஸ்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications