மாலையில் பேன்ட் சட்டை... காலையில் பட்டு வேட்டி.. பேரன் பேத்தி திருமணத்தில் கலக்கிய ராமதாஸ்
சென்னை: பேரன் பேத்தி திருமண வரவேற்பிலும், மண விழா நிகழ்விலும் முகம் முழுக்க சிரிப்பும், உற்சாகமுமாக வலம் வந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேத்தி-பேரன் திருமண விழாவில், திமுக, மதிமுக, காங்கிரஸ், பாஜக அனைத்து கட்சித்தலைவர்களும், விஐபிக்களும் பங்கேற்றனர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி ராமதாஸ் ஆகியோரின் பேத்தியும், முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்-சவுமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சம்யுக்தா, டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரனும், வ.இ.ஜெயராமன்-சுப்புலட்சுமி ஆகியோரின் மகன் வழி பேரனும், பரசுராமன்-ஸ்ரீகாந்தி ஆகியோரின் மகனுமான ப்ரித்தீவன் பரசுராமனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கட்சி பேதம் பார்க்காமல் அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கான்ப்லூயன்ஸ் பாங்க்குயிட்ஸ் ரிசார்ட்சில் நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி, டாக்டர் அன்புமணி ராமதாஸ்-சவுமியா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி-சித்ரா கிருஷ்ணசாமி, ஜெ.பரசுராமன்-ஸ்ரீகாந்தி பரசுராமன் ஆகியோர் வரவேற்றனர்.

பங்கேற்ற பிரமுகர்கள்
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், இ.எஸ்.எஸ்.ராமன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

விஐபிக்கள், நடிகர்கள் பங்கேற்பு
வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், முகசீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி, திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் சந்தானம், உதயநிதி ஸ்டாலின், மூத்த வக்கீல் ஆர்.காந்தி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

மாடர்ன் லுக்கில் ராமதாஸ்
பொதுவாக டாக்டர் ராமதாஸ் எப்போதும் வெள்ளை சட்டை, வேட்டி அணிந்தே காணப்படுவார். ஆனால், நேற்று அவர் இல்ல விழாவில் கலந்துகொண்ட அவர், பேண்ட்-சர்ட் அணிந்து மார்டனாக வலம் வந்தார்.

பாராட்டிய விஐபிக்கள்
அவரை பார்த்த வி.ஐ.பி.க்கள், மார்டன் லுக்கில் நீங்கள் அசத்தலாக இருக்கிறீர்கள் என்று கூறினர். இதற்கு டாக்டர் ராமதாஸ் சிரித்து அவர்களின் பாராட்டுதலை ஏற்றுக்கொண்டார்.

காலையில் வேஷ்டி
மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் மார்டனாக வலம் வந்த ராமதாஸ் இன்றைய தினம் காலையில் திருமண நிகழ்ச்சியில் வேஷ்டி, சட்டை அணிந்து பங்கேற்றார். தனது அழைப்பை ஏற்று திருமணத்திற்கு வந்தவர்களை உற்சாகமாக வரவேற்று பம்பரமாக சுற்றினார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications