அவ்வளவு ஆராய்ச்சியா செய்தார்.. கருணாநிதியை கலாய்க்கும் டாக்டர் ராமதாஸ்!
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று கூறுவதற்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளார் திமுக தலைவர் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கிண்டலடித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் டிவிட்டுகள் ரொம்பப் பிரபலமானவை. சுருக்கமான வரிகளில், நக்கல், நையாண்டி, எள்ளல் என அனைத்தையும் கலந்து பன்ச் வைத்து அவர் போடும் டிவிட்டுகள் படிக்க சுவாரஸ்யமானவை.
அந்த வகையில் நாட்டு நடப்புகளை வைத்து அவர் போட்டுள்ள சில டிவிட்டுகள்..
|
அவ்வளவு ஆராய்ச்சியா?
சபாநாயகர் குட்டி சர்வாதிகாரியாக செயல்படுகிறார்: கலைஞர் - இதை சொல்வதற்கு நான்கு நாளா... அவ்வளவு ஆராய்ச்சியா செய்தீர்கள்?
|
கிழிந்தது புரட்சியாளர்களின் முகமூடி
இணையத்தில் சிந்துவின் சாதியை தேடிய 9 லட்சம் பேர்: இதில் அம்பலப்படாதது சிந்துவின் சாதி, கிழிந்து தொங்கியது போலிப் புரட்சியாளர்களின் முகமூடி!
|
இல்லாதவர்களுக்கும் உதவுங்கள்
வெள்ளி வென்ற சிந்துவுக்கு ரூ.13 கோடி பரிசு குவிந்தது: நல்லது. மகிழ்ச்சி.அதேநேரத்தில் பயிற்சி பெற வசதி இல்லாதவர்களுக்கும் கொஞ்சம் உதவுங்கள்!
|
3 வருஷமா வார்த்தை மாறலையே
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன் - 3 வருஷமா வார்த்தை மாறாத மத்திய அமைச்சர் இவர் தான்!
|
அதில் அம்மா புகழ் 90%
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் 40% நேரம் சைதை துரைசாமியே பேசினார்:செய்தி - அதில் 90% அம்மா புகழை பாடினார் என்பது தான் முக்கியம்!
|
புண்ணியமாவது கிடைக்கும்
திமுக உறுப்பினர்கள் இடைநீக்கத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்: காவிரிக்கோ, கல்விக்கடனுக்கோ போராடினால் புண்ணியமாவது கிடைக்கும்!
|
சொல்லி வைங்க பதவி கிடைக்கும்
முன்னாள் தளபதி விகே சிங் மீது இப்போதைய தளபதி தல்வீர் சரமாரி புகார்: சும்மா சொல்லி வைங்க..அடுத்த ஆட்சியில் உங்களுக்கும் மந்திரி கிடைக்கலாம்!
|
சேம் சேடு கொலை!
கர்நாடகத்தில் பசு பதுகாப்பு படையினர் தாக்கி பா.ஜ.க. நிர்வாகி சாவு: சேம் சைடு கோல் தெரியும்... இது சேம் சைடு கொலையாக இருக்கிறதே?
|
இப்படியா அதிர்ச்சி தருவார் ஜெ.!
24 நேரமும் மக்களை பற்றியே சிந்திப்பதால் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்: ஜெயலலிதா - அட... இப்படியா மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பது?
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications