பாமக முதற்கட்ட வேட்பாளர் வெளியீடு: 45 தொகுதி வேட்பாளர் பட்டியலில் அன்புமணி பெயர் இல்லை
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெயர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
சட்டசபைத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே சந்திக்கிறது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
234 தொகுதிகளுக்கும் போட்டியிடுவதற்கு விருப்பமனு தாக்கல் செய்த பாமக தொண்டர்களிடம், கடந்த இரு மாதங்களுக்கு முன்பே நேர்காணல் நடத்தி வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் தங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார். அதனை ஏற்று கூட்டணிக்கு வர யாரும் தயாராக இல்லை. எனவே வேறு வழியின்றி சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
பாமக வேட்பாளர் பட்டியலை 3 கட்டமாக வெளியிடுவதாக கூறிய டாக்டர் ராமதாஸ் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
1) ஆலங்குடி- டாக்டர் சு.அருள்மணி
2) பொன்னேரி (தனி)- தி.அ.பாண்டியன்
3) செங்கல்பட்டு - கே.ஆறுமுகம்
4) திருவள்ளூர்- வ.பாலயோகி
5) திருப்பூர் தெற்கு - தி.சை.மன்சூர்
6) ஆலந்தூர்- இரா.சீனிவாசன்
7) ஜோலார்பேட்டை - கோ.பொன்னுசாமி
8) திருச்சி கிழக்கு - பா.ஸ்ரீதர்
9) மணச்சநல்லூர்- மா.பிரின்ஸ்
10) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- ஏ.வி.ஏ.கசாலி
11) தியாகராயர்நகர்- வி.வினோத்
12) திரு.வி.க.நகர் (தனி)- தே.வனிதாமணி
13) ஓமலூர்- அ.தமிழரசு
14) சேலம் மேற்கு - இரா.அருள்
15) ஸ்ரீரங்கம்- சு.உமாமகேஸ்வரி
16) மதுராந்தகம் (தனி) - எ.ஆதிகேசவன்
17) பூந்தமல்லி (தனி) - சி.பார்த்தசாரதி
18) திருவிடைமருதூர் (தனி) - எஸ்.ஆர்.மாதவன்
19) அரவக்குறிச்சி - ம.பாஸ்கரன்
20) மன்னார்குடி - சு.பாலப்சுப்பிரமணியன்
21) பெரம்பலூர் (தனி) - மு.சத்தியசீலன்
22) செங்கம் (தனி) - சி.முருகன்
23) ஓசூர் - ப.முனிராஜ்
24) உதகமண்டலம் - மு.பால்ராஜ்
25) மேட்டுப்பாளையம் - கு.மூர்த்தி
26) கவுண்டம்பாளையம் - ஆ.தங்கவேல் பாண்டியன்
27) மொடக்குறிச்சி - செ.நாச்சிமுத்து
28) சேந்தமங்கலம் (தனி-மலைவாழ்) - செ.சுசிலா
29) லால்குடி - இரா.உமாமகேஸ்வரன்
30) பரமக்குடி (தனி) - இரா.தங்கராஜ்
31) திருப்பத்தூர் - பழ.அழகப்பன்
32) மதுரை மத்தி - பி.செல்வம்
33) மதுரை மேற்கு - பா.கிருஷ்ணகுமார்
34) கம்பம் - பொன்.காட்சிக்கண்ணன்
35) பெரியகுளம் (தனி)- இரா.வைகைக்கண்ணன்
36) திண்டுக்கல் - இரா.பரசுராமன்
37) வேடச்சந்தூர் - கே.சி.பழனிச்சாமி
38) விருதுநகர் - பொ.கணேச பெருமாள்
39) அருப்புக்கோட்டை- தீ.அரவிந்த்குமார்
40) திருச்செந்தூர் - த.உஜ்ஜல்சிங்
41) கோவில்பட்டி - ஜி.இராமச்சந்திரன்
42) கடையநல்லூர் - திருமலைக்குமாரசாமி
43) நாங்குநேரி- சா.திருப்பதி
44) திருநெல்வேலி - கணேசன்.கண்ணன்
45) கன்னியாகுமரி - எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின்
45 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அன்புமணி போட்டியிடும் தொகுதி சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications