அம்பி, ரெமோ, அந்நியனின் அடுத்த வாரிசு... ட்விட்டரில் போட்டு தாக்கும் டாக்டர் ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு பற்றியும், தமிழக ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் வெளியான செய்திகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்டுகளை பதிவிட்டுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ஓபிஎஸ் கிணறு பிரச்சினைக்கு அவர் போட்டுள்ள கமெண்ட் படிப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கோபத்தை வரவழைக்கக் கூடியது.

நீட் தேர்வு பற்றி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ள கருத்துக்கு ராமதாஸின் ட்வீட் மரண மாஸ். தமிழ் ஒன் இந்தியா ரசிகர்களே... படிங்க ரசிங்க... உங்க கமெண்ட் அவசியம் மக்களே.

எப்படி தொங்க விடுவது

பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை தலைகீழாக கட்டி தொங்கவிட வேண்டும் என்று ம.பி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்படியானால் தமிழக ஆட்சியாளர்களை எப்படி தொங்கவிடுவது? என்று கேட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

என்ன செய்வது?

கழிப்பறை கட்ட முடியவில்லை என்றால் மனைவியை விற்று விடுங்கள் என்று உத்தர பிரதேச நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கு டாக்டர் ராமதாஸ், இந்த ஜென்மங்களையெல்லாம் என்ன செய்வது? என்று கேட்டுள்ளார்.

அடுத்த வாரிசு

நேற்று நீட் வரும் என்றும் இன்று நீட்டுக்கு பணிய மாட்டோம் என்றும் அமைச்சர் அன்பழகன் பல்டி அடித்துள்ளார். இந்த செய்திக்கு அம்பி, ரெமோ, அந்நியனின் அடுத்த வாரிசு இவர் தான் போலிருக்கிறது! என்று கிண்டலடித்துள்ளார் ராமதாஸ்.

PMK will contest Tamil Nadu polls independently, says Ramadoss

ஓபிஎஸ் கிணறு

மக்களுக்கு விற்பதாக அறிவித்த கிணற்றை வேறு ஒருவருக்கு விற்றார் ஓ.பி.எஸ் என்ற செய்திக்கு இனி தமிழில் உத்தமர் என்ற சொல் ஓ.பி.எஸ் என்று மாற்றப்படும்! என்று பதிவிட்டுள்ளார் ராமதாஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here are some twieets Dr.Ramadoss about Tamil Nadu Ministers.
Please Wait while comments are loading...