இனியும் என்ன தாமதம்? ஜல்லிக்கட்டுக்கு உடனே அவசர சட்டம் கொண்டுவர ராமதாஸ் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வழக்குகள் நிலுவைகள் இருக்கும் போது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு எனவும் ராமதாஸ
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராதமாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க வாய்ப்பில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆகையால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனால் அதற்கு கையாலாகாத தமிழக அரசும், துரோகம் செய்யும் மத்திய அரசும் தான் பொறுப்பு.
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அனைத்து மக்களும் ஆதரவு தருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
அவசர சட்டம் கொண்டுவர முடியாது என மத்திய அரசு கூறுவது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயல். இது வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.
வழக்குகள் நிலுவையில் இருந்தபோதும் அவசர சட்டம் கொண்டுவந்த முன்னுதாரணங்கள் உண்டு. ஆகையால் மத்திய அரசு அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications