Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்கள் பேசினால் என்னென்ன பழிகளை சுமக்க வேண்டியிருக்கும் என்பதை அறிவோம்....

Subscribe to Oneindia Tamil

பெண்களுக்கு எதிரான சக்திகளை கண்டித்து போராடுவதால் என் மீது என்னென்ன முத்திரைகள் குத்தப்படும்; என்னென்ன கணைகள் தொடுக்கப்படும்; எத்தகைய பழிகளை சுமக்க வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

போலிப் புரட்சியாளர்கள் உள்ள உலகத்தில் உண்மையையும், யதார்த்தத்தையும் பேசுபவர்கள் எப்படி பார்க்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். நாடகக் காதலுக்கு சாதி கடந்த காதல் என்ற முலாம் பூசி, அதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என்றொரு தீய பிம்பத்தை போலிப் புரட்சிவாதிகள் உருவாக்கி வைத்திருப்பதன் விளைவு தான் இது.

Dr Ramadoss writes a letter to party leaders

உண்மையில், காதலுக்கு நானோ, எங்கள் கட்சியோ ஒருபோதும் எதிரியல்ல.''காதல் திருமணங்களை பா.ம.க. எதிர்க்கவில்லை. காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது நாகரீக சமுதாயத்தில் சரியானதாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்திற்கு முன்னுரிமை தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் திருமணங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்'' என்று வெளிப்படையாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தான் நீதிமன்றங்களும் எடுத்துள்ளன. 18 வயதுகூட நிறைவடையாத பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கே.பக்தவத்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 2011&ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

''மைனருக்கு 21 வயது நிறைவடையும்போதுதான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, எங்களின் கருத்துப்படி, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா? என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல்வயப்பட்டு, திருமணம் முடித்து, அந்த முடிவுக்காக பின்னர்தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் - இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்'' என்று கூறியுள்ளனர். இதேபோன்ற தீர்ப்பை மேலும் பல உயர்நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை தந்தைப் பெரியார் 45 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியிருக்கிறார்.

''நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும். வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்'' என்று 28.-03.-1971 -அன்று மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த திருமண விழாவில் தந்தை பெரியார் பேசினார். ( ஆதாரம்: விடுதலை, 08.-04.-1971)

பெண்களுக்கான திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் தந்தைப் பெரியார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 70 ஆண்டுகளுக்கு முன் குடியரசு நாளிதழில் தந்தைப் பெரியார் எழுதிய தலையங்கத்தின் ஒருபகுதி பின்வருமாறு:

''பெண்களுக்கு திருமண வயதை இப்போது 21-க்கு கொண்டு வர வேண்டுமென்று சட்டம் இயற்ற இருக்கிறார்கள். இது நம் சமுதாயத்திற்கு மிகத் தேவையானதாகும். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் மிகத் துன்பப்பட வேண்டி இருக்கிறது. 15 வயதிலேயே குழந்தை பெற ஆரம்பித்து விடுவதால் பெண்களின் உடல் இளம் வயதிலேயே சக்தி இழக்க ஆரம்பித்து விடுகிறது'' என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+