சாதி ஒழிப்பு புரட்சி போர்வையில் தூண்டிவிடும் தலைவர்களின் பேச்சு இதுதான்...
அகநானூற்று சூழலில் இயல்பாக பிறந்தாலும், நல்ல நோக்கத்திற்காக உருவெடுத்தாலும் காதல் நல்லது தான். ஆனால், இன்றைய சூழலில் காதல்கள் கட்டமைக்கப்படுவதாகவே உள்ளன. அவ்வாறு கட்டமைக்கப்படும் காதல்களுக்கு உள்நோக்கமும் உள்ளன. இவை தான் பெண்களின் பாதுகாப்பை பறித்து, ஆபத்தை உருவாக்குகின்றன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரு காரணங்கள் முக்கியமானவை. அவற்றில் முதலாவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய பிரதானப் பணி படிப்பது அல்ல... காதலிப்பதே என்ற நச்சு எண்ணத்தை இளைய தலைமுறையின் மனதில் விதைக்கும் திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் ஆகும். இரண்டாவது, சாதி ஒழிப்பு புரட்சி என்ற போர்வையில் பிற சாதிப் பெண்களை காதலிக்கும்படி தமது சமுதாய இளைஞர்களை தூண்டி விடுவதை முழுநேரத் தொழிலாக சில தலைவர்கள் வைத்திருப்பது.
இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான்.

ஆனாலும், அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இனி அவரது உரை வாசகங்கள்....
''மானங்கெட்ட பிறவிகள்... வெட்கங்கெட்ட பிறவிகள். இவர்களுக்கு எது மானம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறது என்றால் பொம்பளை சமாச்சாரம் தான். வேற ஒரு மயிரும் கிடையாது....வேற ஒரு மயிரும் கிடையாது. அவனை திரும்பிப் பார்ப்பதில்லை என்பதால் பொறாமையும் கூட. சிவப்பாக இருக்கிறான்... மீசை வைத்திருக்கிறான்... நல்லா அயர்ன் பண்ணிய சட்டை போடுறான்.
ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஷூ போடுகிறான். பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சென்ட் அடித்துக் கொள்கிறான். இவ்வளவும் அடித்துமே அவனைத் திரும்பி பார்க்கவில்லை. ஆனால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்த, சக்கிலியனை, பள்ளனை, பறையனை அவ திரும்பிப் பார்க்கிறாள் என்றால் அதிலிருந்தே தெரிஞ்சுக்க உங்கள் லட்சனம் எவ்வளவுன்னு...
உன் கேடுகெட்ட லட்சனம் எவ்வளவுன்னு புரிஞ்சுக்க... இது ஒன்னே போதாதா... உன் லட்சனம் எவ்வளவுன்னு அந்த பொண்ணே சொல்கிறாள். இவ்வளவும் இருந்தும் ஒன்னுக்கும் லாயக்கில்லை. உங்கிட்ட ஒரு சரக்கும் இல்லை... ஒரு சரக்கும் உங்கிட்ட இல்லை... அவன் (பறையன்) ஏழையாக இருந்தாலும், வறுமையில் வாடுறவனா இருந்தாலும் அவனிடம் சரக்கும், மிடுக்கும் இருக்கிறது.
அதனால நான் அவன் பின்னால போறேன்னு சொல்றா. அப்பவாவது உனக்கு மானம் இருந்தால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள். ஆனால், இவன் என்ன பண்றான்.... இவள் அங்கு போய் 10 மாதம் படுத்திருந்தாலும் பரவாயில்லை... வா... நான் துடைச்சி விட்டுக்கிறேன்; கழுவி விட்டுக்கிறேன். என் கூட வந்து நீ குடும்பம் நடத்துங்கிறான்.''
இது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உரையா? இவை பெண் இனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் அல்லவா?
இதைவிட மோசமான வார்த்தைகளை எந்த தலைவராவது பேச முடியுமா? கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது.
பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை.
மாறாக, பெண்கள் எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி விடும் ஆபத்திருக்கிறது.
இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications