கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி.. டிக் அடித்த விஜய்.. விஜயபாஸ்கருக்கு ஜாக்பாட் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி அளிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கரூர் இடைத்தேர்தலில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சீட் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால், மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவியை கொடுக்க உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அப்போது தவெக தலைவர் விஜய் தொடங்கி கட்சியின் அத்தனை நிர்வாகிகளும் தலைமறைவாகினர். மீட்பு பணிகளில் கூட தவெகவினர் யாரும் ஈடுபடவில்லை. இதனைத் தொடர்ந்து கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Vijay

இந்த விவகாரத்தில் கட்சியின் தலைமையே தலைமறைவான போதும், மதியழகன் மட்டும் சிறை சென்றார். இவர் ஜாமீனில் வெளியில் வந்த பின், மதியழகன் குடும்பத்தினரை நேரில் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். இருப்பினும் மதியழகனுக்காக கரூர் வந்து விஜய் பிரச்சாரம் கூட செய்யவில்லை. தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட மதியழகன் தோல்வி அடைந்தார்.

இதன்பின் கரூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினார். இதனால் கரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் மதியழகனுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஏற்கனவே உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

கரூரில் அதிமுகவுக்கு இருக்கும் கட்டமைப்பு மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு இருக்கும் சமூக ரீதியிலான ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள தவெக தலைமை கருதுகிறது. இதனால் மதியழகனையும் சரிகட்ட வேண்டிய சூழலில் தவெக உள்ளது. இந்த நிலையில் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி கொடுக்க முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் வாரியத் தலைவர் பதவியை ஏற்றால், கட்சியில் உள்ள அதிகாரத்தை மதியழகன் இழக்க நேரிடும். அதேபோல் கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் ஆதிக்கம் செய்ய தொடங்கிவிடுவார். இதனால் மதியழகன் ஆதரவாளர்கள் வாரியத் தலைவர் பதவியை கேட்காமல், இடைத்தேர்தலில் சீட் கேட்டு முறையிடுங்கள் என்று அறிவுறுத்த தொடங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+