பழனி கோவில் நிலம்.. கேஸ் சிபிசிஐடி கைக்கு போயிருச்சு! களமிறங்கிய ஆபீசர்ஸ்.. உருளப் போகும் தலைகள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 100 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து விவகாரம் தொடர்பாக போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை கோவில் நிர்வாகம் சார்பில் பெறப்பட்ட ஆவணங்கள் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ₹100 கோடி மதிப்புள்ள தர்ம சாசன நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ₹2 கோடிக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த 1 ஏக்கர் 40 சென்ட் நிலமானது, கடந்த 1888 ம் ஆண்டில் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியகாரர் என்பவரால் தண்டபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளைப் பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டது.

Palani Temple Temple Land HRCE

பழனி கோவில் நிலம்

இந்தத் தர்ம சாசன விதிகளின்படி, இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வில்லங்கப்படுத்தவோ உரிமை கிடையாது. இது முழுக்க முழுக்கப் பொது அறக்கட்டளை சொத்தாகும். ஆனால் சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதும், நீதிமன்றத்தில் வழக்குகள் நடப்பதும் வாடிக்கையாகி இருந்து வந்தது. இந்த நிலையில், ​இதனைப் பாதுகாக்கும் பொருட்டுப் பழனி கோயில் நிர்வாகம் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்தி, தற்பொழுது பக்தர்களின் பயன்பாட்டிற்காகக் 'கட்டணமில்லா இலவச வாகன நிறுத்துமிடமாக' மாற்றிப் பராமரித்து வருகிறது.

கோவில் நில மோசடி

இச்சொத்தைத் தனி நபர்கள் விற்கவோ லீசுக்கோ வழங்கவோ, பத்திரப் பதிவோ செய்ய இயலாது. இந்த நிலத்திற்குப் பழனி கோயில் இணை ஆணையரே நிர்வாகி நீடிப்பார் என்றும் பழனி முதன்மைச் சார்பு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே தங்களது தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருந்தன. இந்நிலையில் இதனை மீறி கடந்த ஜூலை 6-ஆம் தேதி, தனிநபர்கள் இருவரது பெயரில் இந்த 1.4 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பத்திரப்பதிவு

பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலில் சென்ற நிலையில், அந்தப் பதவிக்குக் கூடுதல் பொறுப்பில் வந்த சார்பதிவாளர், எந்தவித ஆவணங்களையும் சரியாகச் சரிபார்க்காமல், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முற்றிலும் புறம்பான வகையில் இந்தச் சட்டவிரோதப் பதிவை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் பழனி அடிவாரம் போலீசார் ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ​

சிபிசிஐடி

இவ்வழக்கின் பின்னணி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு குறித்து முழுமையாகப் புலனாய்வு செய்ய, இந்த வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பெறப்பட்ட அனைத்து முக்கிய அசல் ஆவணங்களையும் பழனி போலீசார் தற்பொழுது சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​

முதல் தகவல் அறிக்கை

அனைத்து ஆவணங்களும் தற்பொழுது கைமாறியுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த நில மோசடி விவகாரத்தில் தங்களது விசாரணைப் பிரிவின் கீழ் புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+