விஜய்யை சிவகார்த்திகேயன் சந்தித்தது இதற்காகத்தானா? ப்ளூ சட்டை மாறன் வேற இப்படி சொல்லுறாரே? ரவுண்டு கட்டும் ரசிகர்கள்
சென்னை: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் அரசு பணிகளுக்கு நடுவிலும் திரைத்துறையை சேர்ந்த பலரையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. ஆனால் அந்த சந்திப்பை விட அதற்கு பிறகு ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு இணையத்தில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் பதிவு
விஜய்யை சந்தித்த பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, "ரசிகன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து விஜய் அவார்ட்ஸ் மேடை, கோட் படத்தில் இணைந்து நடித்தது வரை பல நினைவுகளை பகிர்ந்து... நமது சகோதரத்துவமும், நமது பிணைப்பும் என்றும் தொடரும்" என்று அந்த பதிவில் கூறியிருந்தார்.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்ல, தேவையில்லாம உருவாக்கப்பட்ட சர்ச்சைகளுக்கு இதுவே பதில் என்று சொல்லி வந்தனர். அதாவது கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்ததும் இனி விஜய்யின் சினிமா இடத்தில் சிவகார்த்திகேயன் என்று விஜயே சிம்பாலிக்கா சொல்லிவிட்டார் என்று சொல்லப்பட்டது.

சிவகார்த்திகேயன் பற்றிய சர்ச்சை
ஆனால் அதற்குப் பிறகு விஜய்யின் ஜனநாயகன்படம் கடந்த தீபாவளி சமயத்தில் வெளியாக போகிறது என்று சொன்ன நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் அதே நேரத்தில் வெளியாக போகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் விஜய்க்கு போட்டியாக வருகிறார் என்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் சொன்னது போல ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அப்போதும் சிவகார்த்திகேயன் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருந்தார்.
முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
ஆனாலும் நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை திட்டி தீர்த்து வந்தனர். இந்த சர்ச்சைகள் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போலதான் இப்போது சிவகார்த்திகேயன் விஜயை சந்தித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் சேயோன் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அந்த படத்தையும் விஜய்யின் ரசிகர்கள் ட்ரோல் செய்து முடித்து விடக்கூடாது என்று முன்னேற்பாடாக சிவகார்த்திகேயன் விஜயை சந்திக்க போய்விட்டாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கும்போது ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டு கலாய்த்து இருக்கிறார். அதில் "தளபதியை சந்தித்த திடீர் தளபதி" என்று அவர் கலாய்த்து இருக்கிறார். இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி
இதுவரைக்கும் விஜய் எந்த இடத்திலும் எனக்கு சிவகார்த்திகேயன் மீது கோபம் என்று சொல்லவே இல்லை, இப்போது கூட சிவகார்த்திகேயனை சந்தித்ததும் அவரைக் கட்டி அணைத்து தோளில் கை போட்டு சிரித்தபடி புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். ஆனாலும் சிவகார்த்திகேயன் மீது தேவையில்லாத வன்மத்தை சிலர் கொட்டுகிறார்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் பிரச்சனை என்றும் சிவகார்த்திகேயன் தனுஷுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் கூட சிலர் பேசி வந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது தனுஷ் சிவகார்த்திகேயனிடம் அன்பாகவே பேசிய வீடியோக்களும் புகைப்படங்களும் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கல்யாண வீட்டில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் கூட அப்போது பேசப்பட்டன.
விஜய் கூட இருந்தவங்களே இப்படி பண்ணிட்டாங்க.. நடிகர் கில்லி மாறன் இறப்புக்கு பிறகு மகள் உருக்கம்.. குவியும் ஆறுதல்
அதேபோல இப்போது விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் பிரச்சனை என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர். ஆனாலும் இந்த பஞ்சாயத்து மட்டும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. இதுகுறித்து சிவகார்த்திகேயன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.













Click it and Unblock the Notifications