தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி காலமானார்
கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
கோவை காரமடையை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி( வயது83). தொழில்முறை டாக்டரான இவர் தமிழக விவசாயிகள் சங்க தலைவராக இருந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த, சிவசாமி நேற்று மாலை காலமானார். சிவசாமிக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். டாக்டர் சிவசாமி 19-07-1934 அன்று பிறந்தார்.

எம்பிபிஎஸ் படித்தவர்
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார். பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற கிராமப்பகுதிகளில் மருத்துவ சேவை செய்து வந்தார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமி நாயுடுவுடன் இணைந்து பணியாற்றினார்.

நாராயணசாமி நாயுடுவுடன்
ஒருகட்டத்தில் மருத்துவ பணியை உதறிவிட்டு விவசாயிகளின் நலனுக்காக முழுமையாக களமிறங்கினார். நாராயணசாமி நாயுடு மரணத்தை அடுத்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவரானார்.

போராட்டங்கள்
இதன்பின் விவசாயிகளுக்காக பலவிதமான போராட்டங்கள் நடத்தினார். தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் விதத்தில் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டி போராட்டம் நடத்தினார்.

காலமானார்
பலமுறை சிறை சென்றுள்ளார். டாக்டர் சிவசாமி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை பிரிக்கால் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications