அரசியலில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் அழகிரி அண்ட் கோவுக்கு அடிதானோ?
திண்டுக்கல்: அரசியலில்தான் அடிமேல் அடி என்றால்... கிரிக்கெட்டிலும் கூட அழகிரி அண்ட் கோவுக்கு அடிவிழுகிறதே என அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன... மு.க. அழகிரி என்ற பெயரே அரசியல் பக்கங்களில் இருந்து காணாமல் போகும் அளவுக்கு நிசப்தமாக இருந்து வருகிறது.
அதேபோல் திமுக ஆட்சிக் காலத்தில் தயாநிதி அழகிரியும் க்ளவுட் நைன், மீகா எண்டர்டெயின்மெண்ட் என சினிமா தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வந்தார்.. இந்த நிறுவனங்களும் கூட இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறது.

சேவாக், சிம்பு
இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லீக் கிரிக்கெட்டில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை உருவாக்கினார் தயாநிதி அழகிரி. இந்த அணியின் அறிமுக விழாவில் வீரேந்திர சேவாக், நடிகர் சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நேற்று திண்டுக்கல்

திண்டுக்கல்- மதுரை மோதல்
தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் தயாநிதி அழகிரியின் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. திண்டுக்கல் அருகே நத்தத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 18 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

தயாநிதி டீம் தோல்வி
பின்னர் ஆடிய தயாநிதி அழகிரியின் மதுரை ஜெயன்ட்ஸ் அணி 18 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் திண்டுக்கல் டிராகன் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தயாநிதி அழகிரியின் மதுரை ஜெயன்ட்ஸ் அணி தோல்வியை தழுவியது.

மு.க. அழகிரி
திண்டுக்கல்- மதுரை அணிகளின் ஆட்டத்தைப் பார்க்க மு.க. அழகிரியும் நேற்று நத்தம் வருகை தந்திருந்தார். தயாநிதி அழகிரி அணி தோல்வியடைந்த போது, ஏப்பு அரசியலில் தான் 'அ' (அழகிரி) அண்ட் கோவுக்கு நேரம் சரியில்லைன்னா... கிரிக்கெட்டிலும் கூடவா அடிவிழுகனும்... பாவம் என கமெண்ட்டுகள் அடித்ததையும் கேட்க முடிந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications