ஒரு வார்த்தை வெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும்.. இந்த வார்த்தை கண்டிப்பாக தவெகவை விடாமல் துரத்தும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக 'திராவிட மாடல்' என்ற சொல் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதற்குப் போட்டியாக 'சோபா மாடல்' (Sofa Model) என்ற புதிய கிண்டல் சொல் இணையத்திலும் அரசியலிலும் தீயாகப் பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, அவர் விசிக (VCK) அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னதாக அங்கு ஒரு புதிய சோபா கொண்டு வரப்பட்டதும், அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சந்திக்கச் சென்றபோதும் புதிய சோபாக்கள் அங்கு இறக்கப்பட்டதும் பெரும் பேசுபொருளானது.

Dravidian Model vs Sofa Model How Udhayanidhi s Assembly Troll is Haunting Vijay s TVK

இந்த விவகாரத்தை நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடினார். தமிழ்நாடு சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 7ம் தேதி செல்ல வேண்டிய.. தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை.. முக்கியமாக காலை உணவு திட்டம் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இருக்க கூடாது; த.வெ.க ஆட்சியை தொடர தி.மு.க தடையாக இருக்காது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் விஜய். ஒரு தொகுதியில் நிற்க தைரியம் இன்றி இரண்டு தொகுதியில் நின்றுள்ளார்.

நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு எண்ணிக்கை குறைந்து நீங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அதன் பிறகாவது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக செயல்படுங்கள்.

அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. உங்களுக்கு CHANGE வரும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனால் CHANGE-க்கு பின் மிகப்பெரிய EXCHANGE இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.. ஏற்கெனவே திமுக தலைவர் சொன்னதுபோல உங்கள் ஆட்சி தொடர நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசி உள்ளார்.

சோபா பணம்

அவர், சோபாக்கள் மூலமாகப் பணம் கடத்தப்படுவதாக வரும் புகார்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு கிண்டலடித்தார்.

ஏற்கனவே தவெக ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியைத் திரட்ட குதிரை பேரம் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த 'சோபா மாடல்' விமர்சனம் அக்கட்சிக்கு ஒரு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் 'Sofa Model' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவதால், வரும் காலங்களில் விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு இந்தச் சொல் ஒரு பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+