திராவிட இயக்கங்கள் மக்களை குடிகாரர்களாக்கிவிட்டன: ஈ.வி.கே.எஸ். தாக்கு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திராவிட இயக்கங்கள் மக்களை குடிகாரர்களாக ஆகிவிட்டன என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

அமித் ஷா

அமித் ஷா

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பாஜக தலைவர் அமித் ஷா தங்களின் இலக்கு தமிழகம் என்று தெரிவித்துள்ளார். உங்களிடம் இருப்பதை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழகத்தை பிறகு பார்க்கலாம். உதராணமாக சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்துள்ளது, பாஜக பின்தங்கியுள்ளது.

மோடி

மோடி

மோடி பிரதமராக இருக்கும் ஒவ்வொரு நாளும் நமக்கு கருப்பு தினம். கோட்சேவுக்கு சிலை வைக்க தீர்மானித்தவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல்

ஊழல்

தமிழகத்தில் பால் மற்றும் மின் கட்டணம் உயர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் மின்சாரம், முட்டை ஆகியவற்றை கொள்முதல் செய்வதில் ஊழல் அதிகரித்துள்ளது.

திராவிட இயக்கங்கள்

திராவிட இயக்கங்கள்

திராவிட இயக்கங்கள் மக்களை குடிகாரர்களாக ஆக்கிவிட்டன. மத்தியில் மோடியின் ஆட்சி தொடர்ந்தால் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்துவிடுவார்கள். வெற்றியோ, தோல்வியோ எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுப்பது காங்கிரஸ் மட்டுமே. 2016ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 4 சதவீதம் உள்ள வாக்குகளை 40 சதவீதமாக்கி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+