"குவார்ட்டரை உள்ளே தள்ளுங்க.. ஓட்டை பாட்டில்ல போட்டுடுங்க".. ஸ்ரீரங்கத்தைக் கலக்கும் வேட்பாளர்!
திருச்சி: மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளராக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளார் ஆறுமுகம். குடிகாரர்களுக்கு ஆதரவாக இவர் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கென வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தான் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகள்.

குடிமகனே... பெரும் குடிமகனே
தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இவர்களில் ஒருவர். இவர் டாஸ்மாக், டாஸ்மாக்காக ஏறிச் சென்று, போதையில் மிதக்கும் ‘குடி'மக்களிடம் மட்டும் தான் வாக்கு சேகரித்து வருகிறாராம்.

குடிகாரர்கள் சார்பாக...
இது தொடர்பாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் ஆறுமுகம் கூறுகையில், ‘இடைத்தேர்தலில் குடிகாரர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

வாழ்வு உரிமைத் தொகை...
தமிழகத்தில் 2003 முதல் 2014 வரை டாஸ்மாக் சரக்கால் கணவனை இழந்த பெண்கள், அநாதைகளாக்கப்பட்டுள்ள குழந்தைகள் ஏராளம். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு, டாஸ்மாக் வருமானத்திலிருந்து மாதம்தோறும் ரூ. 3000 வாழ்வு உரிமைத் தொகையாக வழங்க வேண்டும்.

தனி கலர் நம்பர் பிளேட்...
அத்துடன் மது குடித்து கல்லீரல், குடல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாவட்டந்தோறும் தனி சிறப்பு மருத்துவமனை தொடங்கணும், மது குடிப்போரின் இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு தனி கலரில் நம்பர் பிளேட் வழங்க வேண்டும்.

இன்சூரன்ஸ்...
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டில்களுக்கு டாஸ்மாக் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் செய்வதைப் போல உயிரைப் பணயம் வைத்து குடிக்கின்ற குடிகாரர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன் நிறுத்தி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

புட்டி சின்னம்...
இவர் வெற்றி பெற்றால், மது குடிப்போரின் குரலை, சட்டசபையில் பதிவு செய்வார் என இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆறுமுகத்தின் சின்னம் ‘புட்டி' (பாட்டில்) என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications