ஊத்தி கொடுக்கும் பெண்... உற்சாகப்படுத்தும் அப்பா...- டிவி சீரியல் கொடுமை

சினிமாவில் மட்டுமே டாஸ்மாக் சீன்கள், குடித்து விட்டு கூத்தடிக்கும் சீன்கள் அதிகரித்து வந்த நிலையில் இப்போது டிவி சீரியல்களிலும் மது அருந்துவது போன்ற காட்சிகள் வைப்பது அதிகரித்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாமி, பேய், பூதம், பாம்பு என்ற கதையை தாண்டி, கவர்ச்சியான உடைகள், மது அருந்தும் கலாச்சாரம் என தமிழ் சீரியல்களிலும் அதிகம் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ப்ரைம் டைம் எனப்படும் மக்கள் அதிக அளவில் பார்க்கும் நேரமான இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் டிவி சீரியல் நந்தினி. புத்தம் புதிய சீரியல் பிரம்மாண்டமாக இருக்கிறது. வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பாகும் டிவி சீரியலை விட அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற பாராட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த சீரியலில் மது குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன என்ற புகாரும் எழுந்துள்ளது.

ஒரு மாப்பிள்ளை 3 பெண்

ஒரு மாப்பிள்ளை 3 பெண்

விஜயகுமார் தனது மகனுக்கு மறுமணம் செய்ய முயற்சி செய்கிறார். இதற்காக அவரது மகள்களை வரச் சொல்லியிருக்கிறார். 3 பெண்களும் தங்களின் குடும்பத்தினருடன் அப்பா வீட்டிற்கு வந்திருக்கின்றனர். மூவருக்கும் ஆளுக்கு ஒரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

சொத்துக்கு ஆசை

சொத்துக்கு ஆசை

அப்பாவிடம் இருக்கும் 600 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டே பெண் கொடுக்க ஆசைப்படுகின்றனர். கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் சொத்து கிடைச்ச உடனே டைவர்ஸ் செய்துக்கலாம் என்று கூலாக சொல்கிறார் ஒரு தந்தை.

ஊத்திக்கொடு

ஊத்திக்கொடு

முழு போதையில் மகனுடன் தண்ணியடிக்கும் அப்பா, மருமகனாக வரப்போகிறவனுக்கும் ஊற்றி கொடுக்கிறார். அதற்கு மகள் ஆம்லேட் போட்டுக்கொண்டு வர, மகளையே ஊற்றிக்கொடுக்கிறார். நல்ல குடும்பம்டா.

மாயம் மந்திரம்

மாயம் மந்திரம்

மஞ்சக்காட்டு மைனா காயத்திரி இந்த சீரியலில் மாய மந்திரம் நிகழ்த்தும் சூனியக்காரியாக வருகிறார். அவரிடம் கணவரை காப்பாற்ற கூடவே பேயாக இருக்கிறார் விஜயகுமாரின் முன்னாள் மருமகள். பேய்க்கும், சூனியக்காரிக்கும் சண்டை ஒருபக்கம் இருக்க பாம்பு ஒருபக்கம் பழிவாங்க துடிக்கிறது.

ப்ரைம் டைமில் அவசியமா?

ப்ரைம் டைமில் அவசியமா?

இதுபோன்ற சீரியல்களை இரவு பத்துமணிக்கு மேல் ஒளிபரப்பலாம் என்ற குரல் கேட்கத் தொடங்கியுள்ளது. என்னதால் டிஆர்பிக்காக சீரியல் ஒளிபரப்பினாலும், குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுவதை தவிர்க்கலாம் என்பதே சீரியல் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+