போதையில் ஆசிட்டை குடித்த குடிகாரன் பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் டாஸ்மாக் சரக்கு என நினைத்து ஆசிட்டை குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள கருங்கல்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஜெயபால் (22). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 27ந் தேதி அளவுக்கு மேலே குடித்து விட்டு போதையில் தடுமாறியபடியே வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் கழிவறை சுத்தம் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த அமிலத்தை "டாஸ்மாக்" சரக்கு என நினைத்த ஜெயபால் தண்ணீர் கலக்கமல் குடித்துள்ளார்.
குடித்த சிறிது நேரத்தில் வயிறு எரியத்தொடங்கியதும், ஐயோ அம்மா என்று கத்தி கூப்பாடு போட்டார். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக ஜெயபாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, எனினும் ஞாயிற்றுக்கிழமையன்று ஜெயபால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கந்தம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications