மாணவிகளை உரசிய குடிகாரர்... தள்ளி விட்ட பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்தார்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் என்ற பகுதியில் ஒரு குடிகார வாலிபர், பள்ளி செல்லும் மாணவியரை உரசியபடி நடந்தார். இதைப் பார்த்த பெண் போக்குவரத்துக் காவலர் ஒருவர் அந்த வாலிபரை அந்தப் பக்கம் போ என்று கூறி தள்ளி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர், பெண் போலீஸ்காரரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதைப் பார்த்து கொதித்துப் போன பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
போக்குவரத்துக் காவலர் ஷீலா என்பவர் நேற்று மாலை போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவ, மாணவிகள் பலர் பஸ் ஏறுவதற்காக பஜார் பகுதியில் காத்திருந்தனர். அப்போது அவர்களை பத்திரமாக பஸ்களில் ஏற அவர் உதவி செய்தார்.
அந்த நேரத்தில் ஒரு குடிகார வாலிபர் போதையில் தள்ளாடியபடி வந்தார். பஸ்சில் ஏறிக் கொண்டிருந்த மாணவிகளை உரசிக் கொண்டு அவர் போனார். இதைப் பார்த்துக் கோபமடைந்த ஷீலா, அந்த வாலிபரைப் பிடித்துத் தள்ளி ஒழுங்காக போ என்று கூறி திட்டினார். இதனால் கோபமடைந்த அந்த குடிகாரர், ஷீலாவின் கன்னத்தில் பளார் என அடித்து விட்டார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் கொதிப்படைந்தனர். அந்த நபரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். போதையும் சற்று தெளிந்து போனது. பின்னர் அவர்களை விலக்கி விட்ட போலீஸ்காரர் ஷீலா, அந்த நபரை ஒரு வண்டியில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றார். அங்கு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தநர். அந்த நபரின் பெயர் கார்த்தி, மேல் குந்தா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications