எப்படி அறைஞ்ச.. சப்புன்னு அறைஞ்சேன்.. சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அடித்தவர் கம்பி எண்ணுகிறார்!
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டரை டிரைவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
சென்னை: சென்னை திருவான்மியூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை ஆட்டோ டிரைவர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் மஜீத் என்பவர், திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அடையாறிலிருந்து ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. சாலையில் கோணல் மாணலாக வந்த ஆட்டோவை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் மறித்து நிறுத்தினார்.

பின்னர் ஆட்டோ ஓட்டி வந்த டிரைவரிடம் தாறுமாறாக ஓட்டி வந்தது குறித்து விசாரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது தகராறாக மாறியதையடுத்து, ஆத்திரமடைந்த டிரைவர் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆட்டோ டிரைவரை திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் டிரைவரின் பெயர் பார்த்தசாரதி என்பதும், அதே பகுதியிலுள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இறுதியில் சப்-இன்ஸ்பெக்டர் டிரைவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications