நாட்டின் 71வது சுதந்திர தினம்...தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீசார்!
நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 71வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் நடக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல்கள், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். விமான நிலையங்களுக்கு இன்று இரவு முதல் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
விமான நிலையத்திற்குள் ஆகஸ்ட் 20ம் தேதி வரைh பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications