அழகிரி "டிஸ்மிஸ்"... ட்விட்டரில் வடகறி பற்றி சிலாகிக்கும் மகன் துரைதயாநிதி
சென்னை: அழகிரியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்காக கவுண்டமணி படத்தைப் போட்டு காமெடி செய்தவர் அவரது மகன் துரை தயாநிதி. ஆனால் அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்ட நிலையிலோ அதைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் தமது "வடகறி" சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு மு.க. அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டார். அப்போது கருணாநிதிக்கு எதிராக தமது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை காட்டமாக முன்வைத்தார் துரைதயாநிதி. அத்துடன் சூரியன் படத்தில் வரும் கவுண்டமணி காட்சி, என்னது சிவாஜிசெத்துட்டாரா என விஜய்சேதுபதி பேசும் காட்சி போன்ற படங்களைப் போட்டு ரகளையாக்கிக் கொண்டிருந்தார் துரை தயாநிதி.
அதன் பின்னரும் அவ்வப்போது அழகிரி செய்திகளை ட்விட்டரில் போட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு வைகோ, அழகிரியை சந்தித்த படத்தையும் போட்டு இருந்தார். அந்தப் பதிவில் கமெண்ட் போட்ட சிலர் ஸ்டாலினை வம்பிக்கிழுத்திருக்கின்றனர். அதையும் துரைதயாநிதி கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இன்று திமுகவில் இருந்தே மு.க. அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டார். இந்த நிலையில் துரை தயாநிதியோ தமது ட்விட்டர் பக்கத்தில் அரசியலை பற்றி மூச்சே விடாமல் தமது "வடகறி" படத்தின் இசையமைப்பு குறித்து சில கருத்துகளை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசித்து கொண்டிருக்கிறார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications