ஜனநாயகத்தில் ஏற்பட்ட விபத்தே அதிமுகவின் வெற்றி: 9-வது முறையாக சட்டசபைக்குள் நுழையும் துரைமுருகன்
சென்னை: ஜனநாயகத்தில் ஏற்பட்ட விபத்துதான் அதிமுகவின் வெற்றி என்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 5-வது முறையாக தொடர் வெற்றியைப் பெற்று 9-வது முறையாக தமிழக சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழையும் பெருமையைப் பெற்றுள்ளார். 1971-1976ஆம் ஆண்டு காட்பாடி சட்டசபை தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் துரைமுருகன்.

ராணிப்பேட்டை- காட்பாடி
பின்னர் 1977,1980 ஆகிய சட்டசபை தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் அவர் வென்றார். 1984-ம் ஆண்டு காட்பாடி சட்டசபை தொகுதியில் மீண்டும் துரைமுருகன் போட்டியிட்ட போதும் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

காட்பாடியில் தொடர்ச்சியாக போட்டி...
1989-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வென்று பொதுப்பணித்துறை அமைச்சரானார். 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் மீண்டும் துரைமுருகன் தோல்வியைத் தழுவினார்.
அதன் பின்னர் 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் காட்பாட்டியிலேயே போட்டியிட்டு தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி மகுடம் சூட்டி வருகிறார் துரைமுருகன்.

9-வது முறையாக எம்.எல்.ஏ.
தற்போது 9-வது முறையாக சட்டசபைக்குள் நுழைகிறார் துரைமுருகன். தம்முடைய வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு துரைமுருகன் அளித்த பேட்டி:

உயிருள்ளவரை...
ஒரே தொகுதியில் 10 முறைக்கு மேல் நிற்பது என்பது சாதாரணமானது அல்ல.. அதிலும் தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது சாதாரணமானது அல்ல.
இந்த எளியேனுக்கு அந்த பெருமையைத் தேடித் தந்தது என் காட்பாடி தொகுதி வாக்காள பெருமக்கள்தான். என் வாழ்நாள் உள்ளளவும் அவர்களுக்காக நான் உயிருள்ளவரையில் உழைப்பேன்...பாடுபடுவேன்.. இதுதான் இந்த நேரத்தில் நான் எடுக்கிற சபதம்.
சில நேரங்களில் ஜனநாயகத்தில் விபத்து ஏற்படுவது உண்டு. அதுதான் இப்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications