காட்பாடியில் தோல்வி முகத்தில் துரைமுருகன் - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தோல்வி அடையும் நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே மேற்கு, தெற்கு, கிழக்கு மண்டல கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், இன்று வடக்கு மண்டலத்தில் உள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு.
அதன்படி காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் தோல்வி அடையும் நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.
இங்கு அதிமுகவுக்கு ஆதரவாக 40 சதவீதம் பேரும், திமுகவுக்கு ஆதரவாக 32.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். தேமுதிகவுக்கு இங்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications