ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக்
தென்காசி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் பேச்சாளரை போன்று நடந்துகொள்வதாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுவதாகவும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ விமர்சித்து உள்ளார்.
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு நிவாரண தொகை கடந்த ஆட்சியில் இருந்தே நிலுவையில் இருந்தது.
இது தொடர்பாக விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை வழங்க வந்து இருக்கிறோம். மாவட்ட ஆட்சியரும் அந்த கோரிக்கைக்கு முறையான தீர்ப்பை வழங்குவதாக கூறியுள்ளார்.

உரத் தட்டுப்பாடு
அதுமட்டுமின்றி இந்த குருவிக்குளம் ஒன்றியத்தில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. யூரியா தட்டுப்பாடு தொடர்பாகவும் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து இருக்கிறோம். அவரும் அதிகாரிகளை அழைத்து விசாரித்து தீர்வை ஏற்படுத்தித் தருவதாக தெரிவித்து உள்ளார்.

ஆட்சியருக்கு பாராட்டு
குறிப்பாக விவசாயிகளின் பிரச்சனைக்காகவே மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்து இருக்கிறேன். மாவட்ட ஆட்சியர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இணையதளத்தில் கிராமங்கள் விடுபட்டு இருப்பதாக கிராம மக்கள் கூறியதை அடுத்து நான் அந்த தகவலை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினேன்.

விவசாயிகள்
உடனுக்குடன் மூன்றே நாளில் அந்த பிரச்சனையை சீரமைத்து கொடுத்தார். மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த பயிர் காப்பீடு விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகவும் கிராம மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார். விவசாயிகள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து உல்ளார்கள்.

அமைச்சர்
இந்த கோரிக்கைகளை துரிதமாக செய்துத் தருவேன் என அவர் வாக்குறுதி அளித்து உள்ளார். மாவட்ட ஆட்சியரே தேவையானதை செய்யும்போது அமைச்சரிடம் செல்ல அவசியம் இல்லை. உத்தரவை பிறப்பித்த பிறகு அமைச்சரிடம் பரிந்துரை செய்யுமாறு ஆட்சியர் சொன்னார். அதற்காக அமைச்சரை சந்திப்பேன்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
அப்போது "தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த துரை வைகோ, "கண்டிப்பாக. அவர் ஆளுநராக செயல்படாமல் பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு செய்தித் தொடர்பாளராக, பாஜகவின் பேச்சாளராக அவரது நடவடிக்கைகள் உள்ளன.

ஜனநாயகத்துக்கு புறம்பானது
இன்றுமட்டுமில்லை, அர்.என்.ரவி எப்போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றாரோ அப்போதில் இருந்தே அவரது நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருந்து வருகின்றன. ஒரு ஆளுநரை பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நடக்காமல் தன்னிச்சையாகவோ, ஜனநாயகத்துக்கு புறம்பாக நடந்துகொள்கிறார்.

20 தீர்மானங்கள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுமார் 20 தீர்மானங்களை அவர் கிடப்பில் போட்டு உள்ளார். இதையெல்லாம் செய்யாமல் சனாதானத்துக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியையும், சித்தாந்தங்களையும் பரப்பும் நபராகவே அவர் இருக்கிறார். அதனால்தான் திமுக மற்றும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள எங்கள் கட்சி உட்பட அனைவரும் இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications